ஆஸ்திரேலியாவின் நட்சத்திர வேகப் பந்துவீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் (36 வயது) தில்லி கேபிடல்ஸ் அணிக்காக விளையாட கிரிக்கெட் ஆஸ்திரேலியா அனுமதி அளித்துள்ளது.
காயம் காரணமாக நடப்பு ஐபிஎல் தொடரில் மிட்செல் ஸ்டார்க் விளையாடாமல் இருக்கிறார். தற்போது, தடையில்லாச் சான்று கிடைத்துள்ள நிலையில் மே 1ஆம் தேதி முதல் அவர் விளையாட வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது.
ஆஷஸ் தொடரில் சிறப்பாக பந்துவீசிய ஸ்டார்க் தொடர் நாயகன் விருது வென்றார். பின்னர் பிபிஎல் தொடரிலும் விளையாடினார். கிரிக்கெட் ஆஸ்திரேலியா இது குறித்து கூறியிருப்பதாவது:
இந்தியாவின் திடலில் தனது வேலைப் பளுவைச் சுமக்க மிட்செல் ஸ்டார்க் தயாராகி வருகிறார். 2026 சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக மே1ஆம் தேதி விளையாடுவார் எனக் கூறப்பட்டுள்ளது.
முன்னதாக, மிட்செல் ஸ்டார்க் விளையாடாமல் இருப்பது குறித்து இந்திய ஊடகங்களில் தவறான தகவல் பரவியதால் அதற்கு மறுப்பு தெரிவித்திருந்தார்.
கடந்த சீசனில் மிட்செல் ஸ்டார்க் 11 போட்டிகளில் 14 விக்கெட்டுகள் எடுத்தார். தற்போது தில்லி அணி புள்ளிப் பட்டியலில் ஐந்தாவது இடத்தில் இருக்கிறது.
Summary
Starc cleared by CA to play IPL, likely to be available for DC's game on May 1.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஐபிஎல் தொடரில் பங்கேற்றதால் பிஎஸ்எல் தொடரில் விளையாட ஜிம்பாப்வே வீரருக்குத் தடை!

விஸ்டன் விருதுகள்: மிட்செல் ஸ்டார்க், தீப்தி சர்மாவுக்கு கௌரவம்! 5ல் 4 இந்தியர்கள் தேர்வு!

தில்லி கேபிடல்ஸ் ரசிகர்களிடம் மன்னிப்புக் கேட்ட மிட்செல் ஸ்டார்க்; காரணம் என்ன?

ஐபிஎல் தொடரில் முதல் போட்டியில் மிட்செல் ஸ்டார்க் விளையாடுவாரா?
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு


