ஜிம்பாப்வே வீரர் பிளெஸ்ஸிங் முஸர்பானி ஐபிஎல் தொடரில் பங்கேற்றதால் பிஎஸ்எல் தொடரில் விளையாட 2 ஆண்டுகள் தடை செய்யப்பட்டுள்ளார்.
இந்தியாவில் ஐபிஎல் (இந்தியன் பிரீமியர் லீக்), பாகிஸ்தானில் பிஎஸ்எல் (பாகிஸ்தான் பிரீமியர் லீக்) போட்டிகள் நடைபெறுகின்றன.
டி20 உலகக் கோப்பையில் ஜிம்பாப்வே வீரர் பிளெஸ்ஸிங் முஸர்பானி கிரிக்கெட் உலகில் கவனம் பெற்றார். இவர் முதலில் பிஎஸ்எல் தொடரில் இஸ்லாமாபாத் யுனைடெட் அணியில் விளையாட ஒப்பந்தமாகி இருந்தார்.
பின்னர், ஐபிஎல் தொடரில் கேகேஆர் அணியில் விளையாட ஒப்பந்தமானதால், தனது பிஎஸ்எல் ஒப்பந்தத்தை முஸர்பானி நிராகரித்தார்.
இது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துக்கு அவமானமாகவும் அவர்களது விதிமுறைகளை மீறியதாகவும் கூறப்படுகிறது. இந்தக் காரணத்தினால், முஸர்பானிக்கு பிஎஸ்எல் தொடரில் விளையாட 2 ஆண்டுகள் தடை விதிக்கப்படுவதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Summary
PSL hands Muzarabani two-year ban for choosing IPL.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஐபிஎல் கோப்பை வென்ற விராட் கோலிக்கு கால்பந்து வீரர் ஹாரி கேன் வாழ்த்து!
என்னுடைய இலக்கை ஐபிஎல் தொடங்கும் முன்பே எழுதி வைத்துவிட்டேன்: வைபவ் சூர்யவன்ஷி

ஐபிஎல் தொடரில் அதிவேகமாக 1000 ரன்களைக் கடந்து வைபவ் சூர்யவன்ஷி சாதனை!







