கால்பந்து வீரர் ஹாரி கேன் ஐபிஎல் கோப்பை வென்ற விராட் கோலிக்கு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ஆர்சிபி அணி குஜராத் டைட்டன்ஸ் அணியை வீழ்த்தி கடந்த ஞாயிற்றுக்கிழமை தனது இரண்டாவது ஐபிஎல் கோப்பையை வென்றது.
இங்கிலாந்து கால்பந்து அணி, பெயர்ன் மியூனிக் கிளப் அணியின் கேப்டனுமான ஹாரி கேன் தனது இன்ஸ்டா பக்கத்தில், ”என்ன மாதிரியான வீரர்! என்ன மாதிரியான ஒரு ஆட்டம் விராட் கோலி! தொடர்ச்சியாக இரண்டு கோப்பைகளை வென்ற ஆர்சிபிக்கு வாழ்த்துகள்” எனக் கூறியுள்ளார்.
இந்தப் பதிவை பயர்ன் மியூனிக் தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளது. கடந்த சீசனில்தான் முதல்முறையாக விராட் கோலியும் ஹாரி கேனும் கோப்பை வென்றது குறிப்பிடத்தக்கது. இருவருக்குமே சாபம் நீங்கிய ஆண்டாக இருந்தது.
சாம்பியன்ஸ் லீக்கின் அரையிறுதியில் பயர்ன் மியூனிக் தோற்றாலும் புன்டெஸ்லீகா தொடரை வென்று அசத்தியது. இந்த சீசனில் ஹாரி கேன் மொத்தமாக 61 கோல்கள், 16 அசிஸ்ட்ஸ் செய்து அசத்தினார்.
ஐபிஎல் தொடரில் கடைசி ஆட்டத்தில் ஆட்ட நாயகன் வென்ற விராட் கோலி மொத்தமாக இந்த சீசனில் 675 ரன்கள் குவித்தார். விராட் கோலி இங்கிலாந்து நாட்டில் குடியேறியிருப்பதால் இருவருக்கும் நல்ல நட்பு தொடருமென எதிர்பார்க்கப்படுகிறது.
Summary
Football player Harry Kane hails Cricketer Virat Kohli after RCB defend IPL crown
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

#ipl2026 | இப்படை தோற்கின் எப்படை வெல்லும்: ஆர்சிபி சாம்பியன்ஸ்! | RCB |

தொடர்ச்சியாக 2 ஐபிஎல் கோப்பை வென்று சாதனை படைப்பீர்களா? ரஜத் படிதார் பதில்!







