ஐபிஎல் வரலாற்றில் 9000 ரன்கள் குவித்துள்ள முதல் வீரர் என்ற வரலாற்றுச் சாதனையை படைத்துள்ள விராட் கோலிக்கு க்ருணால் பாண்டியா புகழாரம் சூட்டியுள்ளார்.
ஐபிஎல் தொடரில் தில்லி அருண் ஜெட்லி திடலில் நடைபெற்ற நேற்றையப் போட்டியில் தில்லி கேபிடல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் விளையாடின. இந்தப் போட்டியில் 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தில்லி கேபிடல்ஸை வீழ்த்தி ஆர்சிபி அபார வெற்றி பெற்றது.
நேற்றையப் போட்டியில் விராட் கோலி 15 பந்துகளில் 23* ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தார். நேற்றையப் போட்டியில் 23 ரன்கள் எடுத்தன் மூலம், ஐபிஎல் வரலாற்றில் 9000 ரன்கள் குவித்த முதல் வீரர் என்ற சாதனையை படைத்தார் விராட் கோலி.
இந்த நிலையில், தொடர்ச்சியாக சிறப்பாக விளையாடுவது மற்றும் ரன்கள் குவிக்க வேண்டும் என்ற விராட் கோலியின் வேட்கை நம்பமுடியாத விதத்தில் இருப்பதாக ஆர்சிபி ஆல்ரவுண்டர் க்ருணால் பாண்டியா அவருக்கு புகழாரம் சூட்டியுள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: விராட் கோலி மிகவும் சிறந்த வீரர். கடந்த 15-20 ஆண்டுகளில் அவர் படைத்துள்ள சாதனைகள் நம்பமுடியாத அளவுக்கு உள்ளது. அவர் மிகவும் சிறப்பாக தொடர்ச்சியாக ரன்கள் குவிக்கிறார். உடற்தகுதி வீரர்களுக்கு எந்த அளவுக்கு முக்கியம் என்பதை உணர்த்தும் விதமாக அவர் உடற்தகுதியை சரியாக வைத்துள்ளார்.
விராட் கோலி அவரது கிரிக்கெட் பயணத்தில் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார். ஐபிஎல் தொடரில் 9000 ரன்கள் குவித்தது தொடர்பாக நான் அவரிடம் எதுவும் கேட்கவில்லை. ஆனால், அவர் தொடர்ச்சியாக சிறப்பாக விளையாடி போட்டிகளை வென்று கொடுப்பார் என நம்புகிறேன் என்றார்.
ஐபிஎல் தொடரில் இதுவரை 275 போட்டிகளில் விளையாடியுள்ள விராட் கோலி, 9012 ரன்கள் குவித்துள்ளார். அதில் 8 சதங்கள் மற்றும் 66 அரைசதங்கள் அடங்கும். அவரது சராசரி 40.05 ஆகவும், ஸ்டிரைக் ரேட் 133.05 ஆகவும் உள்ளது. அவரது அதிகபட்ச ஸ்கோர் 113*.
நடப்பு ஐபிஎல் தொடரில் இதுவரை 8 போட்டிகளில் விளையாடியுள்ள விராட் கோலி, 351 ரன்கள் எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Summary
Krunal Pandya has heaped praise on Virat Kohli, who has achieved the historic milestone of becoming the first player in IPL history to amass 9,000 runs.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஐபிஎல் வரலாற்றில் முதல் வீரர்; மிகப் பெரிய சாதனையை நோக்கி விராட் கோலி!
ஆரஞ்ச் கேப் வென்ற விராட் கோலி..! புள்ளிப் பட்டியலில் 2ஆம் இடத்துக்கு முன்னேறிய ஆர்சிபி!

அதிரடியில் மிரட்டிய சூர்யவன்ஷி; இன்ப அதிர்ச்சியளித்த விராட் கோலி!

ஐபிஎல்: விராட் கோலியின் நீண்ட கால சாதனையை முறியடித்த ரோஹித் சர்மா!
வீடியோக்கள்

Podcast | மே 4-ல் நிகழப்போகிறதா புரட்சி? | News & Views | Epi - 29 | Dinamani
தினமணி செய்திச் சேவை

மனைவியை விதவை என விமர்சித்த தொகுப்பாளர்! கோவத்தில் Trump | Jimmy Kimmel
இணையதளச் செய்திப் பிரிவு

திருச்செந்தூரில் விஜய் சாமி தரிசன ரகசியம் ! | TVK Vijay | Tiruchendur Murugan Temple | TN Election 2026
தினமணி செய்திச் சேவை

உன்னை நம்பி பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு



