/

ஆடுகளத்தில் குறையல்ல; பந்துவீச்சில் அசத்திய ஆர்சிபி: க்ருணால் பாண்டியா

ஐபிஎல் தொடரில் தில்லி கேபிடல்ஸுக்கு எதிராக விளையாடிய ஆடுகளத்தில் எந்தவொரு குறையுமில்லை எனவும், பந்துவீச்சாளர்கள் அபார பந்துவீச்சை வெளிப்படுத்தியதாகவும் க்ருணால் பாண்டியா தெரிவித்துள்ளார்.

News image

ஆர்சிபி அணி வீரர்கள் - படம் | AP

Updated On :28 ஏப்ரல் 2026, 11:26 am

ஐபிஎல் தொடரில் தில்லி கேபிடல்ஸுக்கு எதிராக விளையாடிய ஆடுகளத்தில் எந்தவொரு குறையுமில்லை எனவும், பந்துவீச்சாளர்கள் அபார பந்துவீச்சை வெளிப்படுத்தியதாகவும் க்ருணால் பாண்டியா தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் தொடரில் தில்லி அருண் ஜெட்லி திடலில் நடைபெற்ற நேற்றையப் போட்டியில் தில்லி கேபிடல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் விளையாடின. இந்தப் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

முதலில் விளையாடிய தில்லி கேபிடல்ஸ் அணி ஆர்சிபியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 75 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. ஆர்சிபி தரப்பில் அபார பந்துவீச்சை வெளிப்படுத்திய ஜோஷ் ஹேசில்வுட் 4 விக்கெட்டுகளையும், புவனேஷ்வர் குமார் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினர்.

இந்த நிலையில், தில்லி கேபிடல்ஸுக்கு எதிரான போட்டியில் ஆடுகளத்தில் எந்தவொரு குறையுமில்லை எனவும், ஆர்சிபி பந்துவீச்சாளர்கள் அபார பந்துவீச்சை வெளிப்படுத்தியதாகவும் அந்த அணியின் ஆல்ரவுண்டர் க்ருணால் பாண்டியா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: பவர்பிளேவில் 6 விக்கெட்டுகள் கைப்பற்றி, ஆர்சிபி பந்துவீச்சாளர்கள் எதிரணியிடமிருந்து போட்டியை தங்கள் பக்கம் எடுத்துச் சென்றுவிட்டதாகவே கூறலாம். ஆடுகளம் மோசமானதாக இல்லை. பந்துவீச்சாளர்கள் தங்களது திறமையைப் பயன்படுத்தி விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். ஒவ்வொரு ஆண்டும் எதிரணி வீரர்கள் பந்துவீச்சாளர்களை எதிர்கொள்ள புதிய யுக்தியுடன் வருவதால், இது ஒரு மனதளவிலான ஆட்டமாக மாறியுள்ளது.

பேட்டர்களைக் காட்டிலும் ஒரு படி அதிகமாக சிந்திக்க வேண்டிய இடத்தில் பந்துவீச்சாளர்கள் உள்ளார்கள். அதன் காரணமாகவே என்னுடைய பந்துவீச்சில் உங்களால் பௌன்சர்களை பார்க்க முடிகிறது. சுழற்பந்துவீச்சாளர் பௌன்சர் வீசுவது அவ்வளவு எளிது கிடையாது. பந்துவீச்சாளரின் உடற்தகுதி மிகவும் முக்கியம். ஆனால், புதிய விஷயங்களை முயற்சி செய்து பார்க்க நான் எப்போதும் அச்சப்பட்டதில்லை. அதனை சவாலாகவே எடுத்துக் கொள்வேன் என்றார்.

Summary

Krunal Pandya has stated that there were no flaws in the pitch on which they played against the Delhi Capitals in the IPL series, and that the bowlers delivered an exceptional performance.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.