வளர்ந்த இந்தியாவுக்கான வலுவான தூண் பெண்கள்: பிரதமர் மோடிதேர்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலை உயரும்! ராகுல் காந்தி எச்சரிக்கைஎல்லை தாண்டிய பயங்கரவாதம் : இரட்டை நிலைப்பாட்டிற்கு இடமில்லை - ராஜ்நாத் சிங் அமைச்சர் சேகர்பாபுவால் உயிருக்கு அச்சுறுத்தல்: தவெக வேட்பாளர் புகார்மே 4-ல் விசில் புரட்சி: செங்கோட்டையன்ஈரான் போர்: ஒபெக் அமைப்பிலிருந்து ஐக்கிய அரபு அமீரகம் விலகல்குஜராத் உள்ளாட்சித் தேர்தல்! அனைத்து மாநகராட்சிகளையும் கைப்பற்றிய பாஜக!குஜராத் உள்ளாட்சித் தேர்தலில் பாஜகவினர் 730 பேர் போட்டியின்றித் தேர்வு!விவோ X300 எஃப்இ அறிமுகம் எப்போது? கசிந்தது விலை நிலவரம்மே 1 முதல் சமையல் எரிவாயு சிலிண்டர் முன்பதிவு முறையில் புதிய விதிகள்!ஏப். 30 தவெக வேட்பாளர்களைச் சந்திக்க விஜய் திட்டம்?
/

அமைச்சர் சேகர்பாபுவால் உயிருக்கு அச்சுறுத்தல்: தவெக வேட்பாளர் புகார்

அமைச்சர் சேகர்பாபுவுக்கு எதிராக துறைமுகம் தவெக வேட்பாளர் சினோரா அசோக்கின் புகார் குறித்து...

News image

சேகர்பாபு | சினோரா அசோக் - கோப்புப் படம்

Updated On :28 ஏப்ரல் 2026, 1:11 pm

அமைச்சர் சேகர்பாபுவால் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக தவெக வேட்பாளர் சினோரா அசோக் புகார் அளித்துள்ளார்.

சென்னை துறைமுகம் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் அமைச்சரும் வேட்பாளருமான சேகர்பாபுவால், தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக தவெக சார்பில் போட்டியிடும் சினோரா அசோக், காவல் ஆணையர் அலுவலகத்தில் இணையவழியாக புகார் அளித்துள்ளார்.

வாக்குப் பதிவு நாளில் (ஏப். 23) சேகர்பாபுவுடன் வந்தவர்கள் தன்னைத் தாக்கியதாவும், வாக்கு எண்ணிக்கை நாளிலும் தன்னைத் தாக்குவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் சேகர்பாபு மீதான புகாரில் சினோரா அசோக் தெரிவித்துள்ளார்.

சென்னை துறைமுகத்தில் போட்டியிடும் சினோரா அசோக் மற்றும் சேகர்பாபு ஆகிய இருதரப்பினரிடையே பிரசாரத்தின்போதே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து, வாக்குப் பதிவு நாளில் இரு தரப்பினரும் நேருக்குநேர் மோதிக் கொண்டனர். இரு தரப்பினருக்குமான மோதலை காவல்துறையினரும் துணை ராணுவப் படையினருமே விலக்கி வைத்தனர்.

இந்த நிலையில்தான், சேகர்பாபு மீது சினோரா அசோக் புகார் அளித்துள்ளார்.

Summary

TVK candidate Sinora Ashok alleges life threat from DMK Minister Sekar Babu

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.