நடப்பு ஐபிஎல் தொடர் தொடங்கும் முன்பே தன்னுடைய இலக்கு என்ன என்பதை எழுதி வைத்துவிட்டதாக ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர் வைபவ் சூர்யவன்ஷி தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் தொடரின் 19-வது சீசன் அண்மையில் நிறைவடைந்தது. அகமதாபாதில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியை வீழ்த்தி தொடர்ச்சியாக இரண்டாவது முறையாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூ சாம்பியன் பட்டம் வென்றது.
நடப்பு ஐபிஎல் தொடரில் தனது அதிரடியான பேட்டிங் மூலம், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடும் இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். அதிரடியாக விளையாடிய அவர் 16 போட்டிகளில் 776 ரன்கள் எடுத்து, அதிக ரன்கள் குவித்தவர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்தார்.
இந்த நிலையில், நடப்பு ஐபிஎல் தொடரில் 700 ரன்கள் குவிக்க வேண்டும் என்பதை இந்த சீசன் தொடங்குவதற்கு முன்பாகவே தனது இலக்காக எழுதி வைத்துவிட்டதாக வைபவ் சூர்யவன்ஷி தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: சிறந்த பேட்டிங்குக்கான அனைத்து விருதுகளையும் வென்றது சிறப்பான உணர்வைத் தருகிறது. நடப்பு ஐபிஎல் சீசனிலிருந்து நான் நிறைய விஷயங்களை கற்றுக் கொண்டேன். நீண்ட நாள்கள் தொடர்ந்து கிரிக்கெட் விளையாட வேண்டுமானால், சில விஷயங்களை நான் மேம்படுத்திக் கொள்ள வேண்டியிருக்கிறது. அதில் கவனம் செலுத்தவுள்ளேன். இனி விளையாடும் போட்டிகளிலும் சிறப்பாக செயல்படுவேன்.
நடப்பு ஐபிஎல் தொடர் தொடங்குவதற்கு முன்பாகவே, இந்த ஐபிஎல் சீசனில் 700 ரன்கள் குவிக்க வேண்டும் என்பதை என்னுடைய இலக்காக தொலைபேசியில் எழுதி வைத்தேன். ஒவ்வொரு போட்டிக்குப் பிறகும், நான் என்னுடைய இலக்கை அடைய எந்த இடத்தில் இருக்கிறேன் எனப் பார்ப்பேன். என்னுடைய இலக்கை அடைந்ததில் மகிழ்ச்சி என்றார்.
நடப்பு ஐபிஎல் தொடரின் மிகவும் மதிப்புமிக்க வீரர், வளர்ந்து வரும் வீரர், சூப்பர் ஸ்டிரைக்கர் ஆஃப் த சீசன், ஆரஞ்ச் தொப்பி வெற்றியாளர், சூப்பர் சிக்ஸஸ் ஆஃப் த சீசன் என அனைத்து விருதுகளையும் வைபவ் சூர்யவன்ஷி வென்றது குறிப்பிடத்தக்கது. ஆரஞ்ச் தொப்பியை வென்ற மிகவும் இளம் வீரர் என்ற சாதனையையும் அவர் படைத்தார்.
Summary
Rajasthan Royals player Vaibhav Suryavanshi has stated that he had written down his goal even before the current IPL season began.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










