ஐபிஎல் தொடரை வென்ற ஆர்சிபி அணியினரை அவர்களது அணியின் இயக்குநர் முகமது போபட் சந்தித்துப் பேசினார். இவர்களது சந்திப்பின்போது ஹாட்ரிக் கோப்பை குறித்து பேசப்பட்ட விடியோ வைரலாகி வருகிறது.
ஐபிஎல் போட்டிகள் தொடங்கிய 17 ஆண்டுகளாகக் கோப்பை வெல்லாத ஆர்சிபி அணிக்கு 2023ல் புதிய தலைமைப் பயிற்சியாளர், புதிய கேப்டன், புதிய பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டார்கள்.
கடந்த 17 ஆண்டுகளாக ஆர்சிபி அணியை தொழிலதிபர் விஜய் மல்லையா தொடங்கிய இந்த ஆர்சிபி அணியை 1.78 பில்லியன் அமெரிக்க டாலருக்கு ஆதித்யா பிர்லா குரூப், டைம்ஸ் ஆஃப் இந்தியா, போல்ட் வென்சுரிஸ், பிளாக்ஸ்டோன் ஆகிய நிறுவனங்கள் வாங்கின.
இந்த ஆர்சிபி அணிக்கு 2023 முதல் புதிய தொடக்கமாக அமைந்துள்ளது. ஆர்சிபி அணி 2025 சீசனில் முதல் கோப்பையும் 2026 சீசனில் இரண்டாவது கோப்பையும் பெற்று அசத்தியுள்ளது.
இந்த நிலையில், ஆர்சிபி அணியின் இயக்குநர் முகமது போபட் ஆர்சிபி வீரர்களைச் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். அந்த சந்திப்பில், “நான் ஒரு விஷயம் மட்டுமே சொல்ல மீதமிருக்கிறது. எந்த அணியுமே ஹாட்ரிக் கோப்பையை வென்றதில்லை. கேப்டன் என்ன நினைக்கிறாய்?” என ரஜத் படிதாரிடம் கேட்டார். அதற்குப் பதிலளித்த ரஜத் படிதார், “நிச்சயமாக” எனக் கூறி மூன்று விரல்களையும் காட்டினார்.
இதற்கு முன்னதாக ஆர்சிபி வீரர்கள் ஒரு வெள்ளை பலகையில் தங்களது விருப்பதை எழுதினார்கள். அதில் ரஜத் படிதார் ஆர்சிபி 2026, 2027 என எழுதியிருக்கிறார்.
இந்த இரண்டு விடியோக்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றன. ஆர்சிபி அணியின் தற்போதைய ஃபார்ம் ஹாட்ரிக் அடித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என அதன் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் இருக்கிறார்கள்.
Summary
We Will Win a Hat-trick of IPL Trophies: Rcb skippet Rajat Patidar
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தொடர்ச்சியாக 2 ஐபிஎல் கோப்பை வென்று சாதனை படைப்பீர்களா? ரஜத் படிதார் பதில்!

பிளே ஆஃப்ஸ் வரலாற்றில் முதல் வீரர்..! தொட முடியாத உயரத்தில் ரஜத் படிதார்!

தற்காப்பு அல்ல தாக்குதல்தான்... குஜராத்தை எச்சரித்த ஆர்சிபி கேப்டன்!







