தமிழக தேர்தல்: பிற்பகல் 1 மணி வரை 56.81% வாக்குப்பதிவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!அமைச்சர் அன்பில் மகேஸ் வாக்களித்தார்!மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவு
/

தமிழ்நாடு

தமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! பிற்பகல் 1 மணி நிலவரம்! - நேரலை!

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்குத் தொடங்கி நடைபெற்று வருகிறது.

தமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! பிற்பகல் 1 மணி நிலவரம்! - நேரலை!
Updated On :23 ஏப்ரல் 2026, 9:26 am
9:25 am, 23 ஏப்ரல் 2026

மதுரை மாவட்டத்தில் 1 மணி நிலவரம் வாக்குப்பதிவு சதவீதம் : 54.75%

1.மதுரை மத்திய தொகுதி : 50.69%

2.மதுரை கிழக்கு : 54.61%

3.மதுரை வடக்கு : 50.43%

4.மதுரை தெற்கு : 53.83%

5.மதுரை மேற்கு : 54.33%

6.மேலூர் : 55.33%

7.சோழவந்தான்: 57.43%

8.திருமங்கலம் : 60.12%

9.திருப்பரங்குன்றம் : 55.34%

10.உசிலம்பட்டி : 53.98%

அதிகபட்சமாக திருமங்கலத்தில் 60.12% வாக்குப்பதிவு. குறைந்தபட்சமாக மதுரை வடக்கு தொகுதியில் 50.43% வாக்குப்பதிவு.

9:22 am, 23 ஏப்ரல் 2026

கரூர் மாவட்டம் 1 மணி நிலவரம் 

அரவக்குறிச்சி - 61.66%

கரூர் - 58.45%

கிருஷ்ணராயபுரம் - 62.14%

குளித்தலை - 61.14%

கரூர் மாவட்டத்தின் மொத்தம் வாக்குப்பதிவு - 60.77%

9:21 am, 23 ஏப்ரல் 2026

தேனி மாவட்டம் 1 மணி நிலவரம் - வாக்குப்பதிவு

ஆண்டிபட்டி - 56.54%

பெரியகுளம் - 53.91%

போடி - 55.45%

கம்பம் - 56.68%

9:10 am, 23 ஏப்ரல் 2026

சென்னையில் 1 மணி நிலவரம்

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் சென்னையில் உள்ள தொகுதிகளில் பகல் 1 மணி நிலவரப்படி 54.58 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன.

8:20 am, 23 ஏப்ரல் 2026

நெல்லை மாவட்ட பிற்பகல் 1 மணி வாக்குப்பதிவு நிலவரம்

திருநெல்வேலி மாவட்டம் - 50.40%

திருநெல்வேலி - 51.72%

அம்பாசமுத்திரம் - 55.76%

பாளையங்கோட்டை - 45.17%

நான்குநேரி - 50.17%

ராதாபுரம் - 49.68%

8:17 am, 23 ஏப்ரல் 2026

தமிழக தேர்தல்: பிற்பகல் 1 மணி வரை 56.81% வாக்குப்பதிவு!

அதிகபட்சமாக திருப்பூர் மாவட்டத்தில் 62.97 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.

7:47 am, 23 ஏப்ரல் 2026

4 மணி நேரத்தில் 2 கோடி பேர் வாக்களிப்பு

இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில், 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கும் மேல் வாக்களித்திருக்கிறார்கள் என்கின்றன தரவுகள்.

7:37 am, 23 ஏப்ரல் 2026

ரீல்ஸ் போட்டவர் கைது

திருப்பத்தூரில் வாக்களிப்பதை விடியோவாக பதிவிட்டு இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் வெளியிட்ட சக்திவேல் என்பவரை காவல்துறையினர் கைது செய்தனர்.

7:18 am, 23 ஏப்ரல் 2026

சென்னை 11 மணி நிலவரம் - வாக்குப்பதிவு (சதவீதத்தில்)

11. டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் - 35.63

12. பெரம்பூர் - 36.26

13. கொளத்தூர் - 37.06

14. வில்லிவாக்கம் - 36.92

15. திருவிக நகர் - 31.37

16. எழும்பூர் - 34.28

17. ராயபுரம் - 31.71

18. துறைமுகம் - 34.32

19. சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி - 34.44

20. ஆயிரம் விளக்குகள் - 35.65

21. அண்ணா நகர் - 36.7

22. விருகம்பாக்கம் - 39.27

23. சைதாப்பேட்டை - 34.38

24. தியாகராய நகர் - 39.08

25. மயிலாப்பூர் - 31.47

26. வேளச்சேரி - 37.18

7:12 am, 23 ஏப்ரல் 2026

அரியலூர் மாவட்டம் 11 மணி வரை வாக்குப்பதிவு 

அரியலூர் தொகுதி - 37.47 சதவீதம்

ஜெயங்கொண்டம் தொகுதி - 34.76 சதவீதம்

7:12 am, 23 ஏப்ரல் 2026

11 மணி நிலவரம்

காஞ்சிபுரம் மாவட்டம் - 39.48 சதவிகிதம்

புதுக்கோட்டை மாவட்டம் - 37.12 சதவிகிதம்

மதுரை - 36.22%

நாமக்கல் - 41.41%

கரூர் - 39.70%

தருமபுரி மாவட்டத்தில் 38.28 % வாக்குகள் பதிவாகியுள்ளன.

கடலூர் மாவட்டத்தில் காலை 11 மணி நிலவரப்படி 36.30% வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது.

6:55 am, 23 ஏப்ரல் 2026

காலை 11 மணி நிலவரம்: திருப்பூரில் அதிகபட்ச வாக்குப்பதிவு!

அதிகபட்சமாக திருப்பூர் 42.45% வாக்குகள் பதிவாகியுள்ளன.

ஈரோடு - 41% நாமக்கல் - 41.41% சேலம் - 40.56% வாக்குகள் பதிவு.

6:54 am, 23 ஏப்ரல் 2026

சேலம் மாவட்டம் 11 மணி நிலவரம்

கெங்கவல்லி - 40.47

ஆத்தூர் - 42.51

ஏற்காடு - 39.24

ஓமலூர் - 39.57

மேட்டூர் - 41.01

எடப்பாடி - 39.94

சங்ககிரி - 42.49

சேலம் மேற்கு - 39.67

சேலம் வடக்கு - 39.91

சேலம் தெற்கு - 40.62

வீரபாண்டி - 41.21 வாக்குப்பதிவு.

6:41 am, 23 ஏப்ரல் 2026

காமராஜருக்குப் பிறகு அதிக தொழிற்சாலைகளைக் கொண்டு வந்தவர் மு.க. ஸ்டாலின்! கே.எஸ். அழகிரி

கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே கீரப்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி தனது குடும்பத்தினருடன் சென்று வாக்கு செலுத்தினார்.

6:19 am, 23 ஏப்ரல் 2026

திமுக ஆட்சிக்கு மதிப்பெண்கள் வழங்கும் நாள் இன்று! அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்

6:18 am, 23 ஏப்ரல் 2026

தமிழகம் முழுவதும் எதிர்பார்க்கும் திமுக அரசு மீண்டும் அமையும்! ப. சிதம்பரம்

6:15 am, 23 ஏப்ரல் 2026

திருநெல்வேலி மாவட்டத்தில் 11 மணி வரை 32.95% வாக்குகள் பதிவு

தொகுதிவாரியாக விவரம்...

திருநெல்வேலி - 34.17%

அம்பாசமுத்திரம் - 36.85%

பாளையங்கோட்டை- 29.81%

நான்குனேரி - 32.23%

ராதாபுரம் -32.04%

6:15 am, 23 ஏப்ரல் 2026

தமிழக தேர்தல்: காலை 11 மணி வரை 37.56% வாக்குகள் பதிவு!

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில், காலை 11 மணி நிலவரப்படி 37.56 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

6:14 am, 23 ஏப்ரல் 2026

எல்.கே. சுதீஷ் வாக்களிப்பு

Live blog image

தேமுதிக பொருளாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான எல்.கே. சுதீஷ் தனது குடும்பத்துடன் சென்று வாக்களித்தார்.

6:11 am, 23 ஏப்ரல் 2026

எஸ்.ஏ. சந்திரசேகர் - ஷோபா வாக்களிப்பு

தவெக தலைவர் விஜய்யின் தந்தையும் இயக்குநருமான எஸ்.ஏ. சந்திரசேகர் மற்றும் அவரது தாய் ஷோபா ஆகியோர் வாக்களித்தனர்.

6:10 am, 23 ஏப்ரல் 2026

பிரபலங்கள் வாக்களிப்பு

சென்னையில் நடிகர்கள் விக்ரம், தனுஷ், விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் உள்ளிட்டோர் அவரவர் வாக்குச் சாவடிகளில் ஜனநாயகக் கடமையாற்றினர்.

6:08 am, 23 ஏப்ரல் 2026

த்ரிஷா வாக்களித்தார்

சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள புனித பிரான்சிஸ் சேவியர் நடுநிலைப் பள்ளியில் நடிகை த்ரிஷா இன்று வாக்களித்தார்.

5:44 am, 23 ஏப்ரல் 2026

வாக்களித்த புதுமணப்பெண்!

நாமக்கல்லில் திருமணம் முடிந்தவுடன் கணவருடன் வந்து வாக்களித்த புதுமணப்பெண்.

5:08 am, 23 ஏப்ரல் 2026

எடப்பாடியில் குடும்பத்தினருடன் சென்று வாக்களித்தார் இபிஎஸ்! 

சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதியில் சிலுவம்பாளையத்தில் உள்ள அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி, தன்னுடைய குடும்பத்தினருடன் சென்று வாக்கினைப் பதிவு செய்தார்.

5:08 am, 23 ஏப்ரல் 2026

காலை 9 மணி வரை 17.69% வாக்குகள் பதிவு!

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், காலை 9 மணி நிலவரப்படி 17.69 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

4:46 am, 23 ஏப்ரல் 2026

விஜய் கடிதம்

தமிழ்நாட்டில் அனைத்து தொகுதிகளிலும் இரவு 8 மணிவரை வாக்குப்பதிவு நேரத்தை நீட்டிக்க வேண்டும் என்று தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இந்திய தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் எழுதியுள்ளார்.

4:31 am, 23 ஏப்ரல் 2026

அமைச்சர் அன்பில் மகேஸ் வாக்களித்தார்!

திருச்சியில் தமிழ்நாடு அமைச்சர் அன்பில் மகேஸ் வியாழக்கிழமை காலை வாக்களித்தார்.

தமிழ்நாடு சட்டப்பேரவை திருவெறும்பூர் தொகுதியில் மூன்றாவது முறையாக திமுக வேட்பாளராக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி போட்டியிடுகிறார்.

Live blog image
4:29 am, 23 ஏப்ரல் 2026

வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு

பண்ருட்டி மற்றும் திட்டக்குடியில் இரண்டு வாக்குச்சாவடி மையங்களில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வேலை செய்யவில்லை.

இதையடுத்து, பெல் நிறுவன ஊழியர்கள் வரவழைக்கப்பட்டு பழுது நீக்கப்பட்டதைத் தொடர்ந்து சுமார் ஒரு மணி நேரம் தாமதமாக வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.

Live blog image
4:10 am, 23 ஏப்ரல் 2026

கோவை வாக்குச் சாவடியில் 'டினா' ரோபோ!

கோவை அரசு கலைக் கல்லூரி வளாகத்தில் உள்ள வாக்குச் சாவடியில் இன்று ஒரு சுவாரசியமான காட்சி அரங்கேறியது.

3:48 am, 23 ஏப்ரல் 2026

தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்

தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் சென்னை ஆழ்வார்வேட்டையில் உள்ள கல்லுரியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில் குடும்பத்துடன் வந்து வாக்களித்தார்.

3:39 am, 23 ஏப்ரல் 2026

கிளாம்பாக்கத்தில் பேருந்து கிடைக்காமல் மக்கள் அவதி!

சென்னை அடுத்த கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில், சொந்த ஊர்களுக்குச் செல்ல போதிய பேருந்துகள் இல்லாமல் பயணிகள் அவதியடைந்துள்ளனர்.

3:34 am, 23 ஏப்ரல் 2026

வாக்களித்தார் தவெக தலைவர்

சென்னை சோழிங்கநல்லூர் தொகுதிக்கு உள்பட்ட நீலாங்கரை பகுதியில் அமைக்கப்பட்டிருக்கும் வாக்குச்சாவடியில் தவெக தலைவர் விஜய் இன்று வாக்களித்தார்.

3:33 am, 23 ஏப்ரல் 2026

வாக்களித்தார் அஜித்

சென்னை திருவான்மியூரில் உள்ள வாக்குச்சாவடிக்கு 6.45 மணிக்கு சென்ற நடிகர் அஜித்குமார், முதல் ஆளாக தனது வாக்கினை பதிவு செய்தார்

3:11 am, 23 ஏப்ரல் 2026

டெல்டாவில் பெரும்பான்மை தொகுதிகளை கைப்பற்றுவோம்- அமைச்சர் கே.என்.நேரு

திருச்சி மேற்கு தொகுதிக்குட்பட்ட தில்லைநகர் மக்கள் மன்றத்தில் உள்ள வாக்குச்சாவடிக்கு காலை 7 மணிக்கே வாக்களிக்க வந்த திமுக முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, வி.வி.பேட் இயந்திரம் பழுதானதால் சுமார் 45 நிமிடங்கள் காத்திருந்து தனது வாக்கினைப் பதிவு செய்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "திருச்சி மாவட்டத்தைப் பொறுத்தவரை 9 தொகுதிகளையும் திமுகவே கைப்பற்றும். ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு இலக்கு இருக்கும், அந்த இலக்கை நோக்கி நாங்கள் பயணிக்கிறோம். டெல்டா பகுதியில் பெரும்பான்மையான தொகுதிகளை திமுக வெல்லும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. இங்கு வாக்களிக்க வந்துள்ள மக்கள் மிகுந்த ஆர்வத்துடன் எங்களுக்கு வாக்களித்து வருகின்றனர் என்று தெரிவித்தார்.

3:09 am, 23 ஏப்ரல் 2026

நேரு வாக்களித்தார்

திருச்சி தில்லை நகரில் உள்ள மக்கள் மன்றத்தில் திமுக முதன்மைச் செயலாளரும் மேற்கு தொகுதி சட்டமன்ற வேட்பாளருமான கே என் நேரு அவர்கள் தனது வாக்கை பதிவு செய்தார்

நேரு

நேரு - dps

3:08 am, 23 ஏப்ரல் 2026

விழுப்புரம் மாவட்டத்தில் வாக்குப்பதிவு தொடங்கியது

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 7 சட்டப் பேரவைத் தொகுதிகளில் வியாழக்கிழமை காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது.

2:59 am, 23 ஏப்ரல் 2026

மநீம தலைவர் கமல் வாக்களித்தார்!

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல் வாக்களித்தார்.

2:29 am, 23 ஏப்ரல் 2026

வாக்களித்தார் சீமான்

சென்னை நீலாங்கரை பகுதியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வாக்களித்தார். வாக்காளிக்காமல் இருப்பது ஜனநாயக விரோதம். அனைவரும் தவறாமல் வந்து வாக்களிக்க வேண்டும் என்று சீமான் வலியுறுத்தினார்.

2:29 am, 23 ஏப்ரல் 2026

சிதம்பரம் மானா சந்து நகராட்சி நடுநிலைப் பள்ளியில் மார்க்சிஸ்ட் கம்யூனிட்ஸ் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் வாக்களித்தார்.

2:19 am, 23 ஏப்ரல் 2026

குடும்பத்துடன் வந்து வாக்களித்தார் இபிஎஸ்

எடப்பாடி தொகுதி சிலுவம்பாளையம் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடிக்கு குடும்பத்துடன் வந்து வாக்களித்தார் அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி.

2:18 am, 23 ஏப்ரல் 2026

வாக்களித்தார் அர்ச்சனா பட்நாயக்

தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக், வாக்களித்தார்.

2:10 am, 23 ஏப்ரல் 2026

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல்! வாக்குப்பதிவு தொடங்கியது!!

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு வியாழக்கிழமை (ஏப்.23) காலை 7 மணிக்குத் தொடங்கி நடைபெற்று வருகிறது.

2:09 am, 23 ஏப்ரல் 2026

வாக்காளர் விவரம்

மொத்த வாக்காளா்கள் - 5,73,43,291

ஆண்கள்-2,80,30,658

பெண்கள் - 2,93,04,905

மூன்றாம் பாலினத்தவா் - 7,728

2:08 am, 23 ஏப்ரல் 2026

பதற்றமான வாக்குச்சாவடிகள்

தமிழகத்தில் 33,133 இடங்களில் 75,064 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில், 3,025 இடங்களில் உள்ள 5,949 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை எனக் கண்டறியப்பட்டுள்ளது.

2:08 am, 23 ஏப்ரல் 2026

தபால் வாக்குகள்

புதன்கிழமை வரை 4.18 லட்சம் தபால் வாக்குகள் பதிவாகியுள்ளன.

2:08 am, 23 ஏப்ரல் 2026

கடும் கட்டுப்பாடுகள்

வெளி தொகுதிகளில் வந்து பிரசாரம் செய்தவா்கள் தொகுதிகளைவிட்டு வெளியேற வேண்டும் உள்ளிட்ட கடும் கட்டுப்பாடுகளை தோ்தல் ஆணையம் விதித்தது.

வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. வாக்காளர்களுக்கும் வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

2:07 am, 23 ஏப்ரல் 2026

நான்குமுனைப் போட்டி

தமிழக பேரவைத் தோ்தலில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி மற்றும் நாதக, தவெக ஆகிய நான்குமுனைப் போட்டி ஏற்பட்டுள்ளது. தோ்தல் தேதி கடந்த மாா்ச் 15-இல் அறிவிக்கப்பட்டதைத் தொடா்ந்து, கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக நடைபெற்றுவந்த தீவிர தோ்தல் பிரசாரம் செவ்வாய்க்கிழமை (ஏப். 20) மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது.

2:07 am, 23 ஏப்ரல் 2026

முதல் முறை வாக்காளர்கள்

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் 5.73 கோடி வாக்காளா்கள் வாக்களிக்க உள்ளனா். இதில், 14 லட்சம் போ் முதல் முறை வாக்காளா்கள்; 3.98 லட்சம் போ் 85 வயதைக் கடந்தவா்கள். மாநிலம் முழுவதும் 75,064 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. மொத்தமுள்ள 234 தொகுதிகளில் 4,023 வேட்பாளா்கள் போட்டியிடுகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.