தவெக தலைவர் விஜய்யின் தந்தையும் இயக்குநருமான எஸ்.ஏ. சந்திரசேகர் மற்றும் அவரது தாய் ஷோபா ஆகியோர் வாக்களித்தனர்.
தமிழ்நாடு முழுவதும் இன்று சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்று வருகின்றது. அரசியல் தலைவர்களும், சினிமா பிரபலங்கள் உள்பட பொதுமக்கள் அனைவரும் காலைமுதல் வரிசையில் நின்று ஆர்வத்துடன் வாக்குகளை செலுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், சென்னை அடையாறில் உள்ள காமராஜ் அவென்யூ அரசுப் பள்ளியில் விஜய்யின் தந்தையும் இயக்குநருமான எஸ்.ஏ. சந்திரசேகர் மற்றும் அவரது தாயும் பாடகியுமான ஷோபா ஆகியோர் வாக்களித்தனர்.
விஜய் வழக்கமாக அணியும் வெள்ளை நிற உடை அணிந்து வாக்களிக்க தவெகவினர் வலியுறுத்திய நிலையில், விஜய்யின் பெற்றோரும் வெள்ளை நிற உடையில் வந்து வாக்களித்தனர்.
வாக்களித்த பின் செய்தியாளர்களிடம் எஸ்.ஏ. சந்திரசேகர் பேசியதாவது:
”தேர்தல் அமைதியாக நடப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. தனது தொழிலை விட்டுவிட்டு எனது மகன் சமூகத்துக்காக சேவை செய்வதற்கு வந்துள்ளார். மக்கள் முடிவெடுப்பார்கள். இதுவரை வாக்களிக்காத இளைஞர்கள்கூட வாக்களித்து வருகிறார்கள்.
அரசியலில் ஆர்வம் இல்லாதவர்கள்கூட இந்த முறை அரசியலை கற்றுக் கொள்ள நினைப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது” என்றார்.
Summary
TVK leader Vijay's father—director S.A. Chandrasekhar—and his mother, Shoba, cast their votes.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சி: கி. வீரமணி

Vote For TVK! ரசிகர்களுக்கு பதிலளித்த நடிகர் ஜெய்!
விசில் சின்னத்துக்கு வாக்களிக்க மக்கள் தயார்: என். ஆனந்த் நம்பிக்கை

பேரவைத் தோ்தலில் அதிமுக கூட்டணிக்கு ஆதரவு! தமிழக விவசாயிகள் சங்க மாநில செயற்குழு முடிவு!
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு



