தமிழக தேர்தல்: பிற்பகல் 1 மணி வரை 56.81% வாக்குப்பதிவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!அமைச்சர் அன்பில் மகேஸ் வாக்களித்தார்!மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவு
/

செய்திகள்

மேற்கு வங்க பேரவைத் தேர்தல் 2026! 62.18% வாக்குப்பதிவு- நேரலை

மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

மேற்கு வங்க பேரவைத் தேர்தல் 2026! 62.18% வாக்குப்பதிவு- நேரலை

வாக்களித்த மகளிர் - பிடிஐ

Updated On :23 ஏப்ரல் 2026, 9:20 am
9:09 am, 23 ஏப்ரல் 2026

முர்ஷிதாபாத் கலவரம்: ஆட்சியரிடம் அறிக்கை கோரும் தேர்தல் ஆணையம்

மேற்கு வங்க மாநிலம் முர்ஷிதாபாத் தொகுதியில் இரு கட்சியினரிடையே ஏற்பட்ட கலவரம் குறித்து மாவட்ட ஆட்சியர் மற்றும் தேர்தல் அலுவலரிடம் தேர்தல் ஆணையம் அறிக்கை கோரியுள்ளது.

8:19 am, 23 ஏப்ரல் 2026

1 மணி நிலவரப்படி 62.18% வாக்குப்பதிவு

மேற்கு வங்கத்தில் இன்று காலை 1 மணி நிலவரப்படி 62.18 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளதாக இந்தியத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

7:27 am, 23 ஏப்ரல் 2026

முர்ஷிதாபாத்தில் இரு கட்சிகளிடையே கலவரம்! வாக்குப்பதிவு பாதிப்பு!

மேற்கு வங்க மாநிலம் முர்ஷிதாபாத் தொகுதிக்குட்பட்ட ஒரு வாக்குச்சாவடியில் திரிணமூல் காங்கிரஸ் - ஆம் ஜனதன் உன்னயான் கட்சி தொண்டர்களிடையே மோதல் ஏற்பட்டதால், வாக்குப்பதிவு பாதிக்கப்பட்டது.

7:06 am, 23 ஏப்ரல் 2026

வாக்குச்சாவடியில் நுழைந்த யானை

மேற்கு வங்கத்தின் ஜார்கிராம் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச் சாவடி அருகே காட்டு யானை நுழைந்ததால் வாக்குப்பதிவு பாதிக்கப்பட்டுள்ளது.

ஜார்கிராம் பகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் காட்டு யானை நுழைந்த நிலையில், வாக்களிக்க வரிசையில் காத்திருந்த மக்கள், யானையைக் கண்டு சிதறி ஓடினர். இதனால் வாக்குப்பதிவு பாதிக்கப்பட்டுள்ளது.

6:22 am, 23 ஏப்ரல் 2026

மேற்கு மேதினிபூரில் அதிகபட்ச வாக்குப்பதிவு

மேற்கு வங்கத்தில் முர்ஷிதாபாத் மாவட்டத்தின் சம்சேர்கஞ்ச் தொகுதியில் 41.59 சதவீதமும், மேற்கு மேதினிபூர் மாவட்டத்தின் சந்திரகோனா தொகுதியில் 46.61 சதவீதமும் வாக்குகள் பதிவாகின.

மிகக் குறைந்த அளவாக, கூச் பெஹார் தெற்குத் தொகுதியில் 38.67 சதவீத வாக்குகள் பதிவாகின. இதைத் தொடர்ந்து, மால்டா மாவட்டத்தின் சஞ்சல் தொகுதியில் 38.22 சதவீதமும், ஹரிச்சந்திரபூர் தொகுதியில் 37.48 சதவீதமும் வாக்குகள் பதிவாகின.

6:21 am, 23 ஏப்ரல் 2026

11 மணி நிலவரம்: 41.11% வாக்குப்பதிவு

மேற்கு வங்க மாநிலத்தில் இன்று காலை 11 மணி நிலவரப்படி 41.11சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளதாக இந்தியத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

6:02 am, 23 ஏப்ரல் 2026

மக்கள் குரல் ஓங்கி ஒலிக்க வேண்டும்: கார்கே

மேற்கு வங்கத்தில் இன்று சட்டமன்றத் தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில், அனைத்துக் குடிமக்களும் தவறாமல் வெளியே வந்து, பெருமளவில் வாக்களிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

உங்களை ஊக்கமிழக்கச் செய்ய முயலும் சக்திகளைக் கண்டு நீங்கள் அஞ்சிவிட வேண்டாம். உங்கள் வாக்குதான் உங்கள் குரல்; அந்தக் குரல் ஓங்கி ஒலிக்க வேண்டும்.

5:58 am, 23 ஏப்ரல் 2026

பாரமதி, ரஹூரியில் இடைத்தேர்தல் ஏன்?

மகராஷ்டிரத்தின் முன்னாள் துணை முதல்வரும், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவருமான அஜீத் பவார், ஜனவரி 28 அன்று நடந்த விமான விபத்தில் உயிரிழந்ததைத் தொடர்ந்து, பாராமதி சட்டப்பேரவைத் தொகுதி காலியானது. இதனால் பாரமதியில் இன்று சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்று வருகிறது.

கடந்த ஆண்டு அக்டோபரில் பாஜக சட்டப்பேரவை உறுப்பினர் சிவாஜி கார்டிலே காலமானதைத் தொடர்ந்து, ரஹுரி சட்டப்பேரவைத் தொகுதி காலியானது.

ரஹுரி தொகுதியில் சிவாஜி கார்டிலேவின் மகன் அக்‌ஷய் கார்டிலே போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து என்சிபி (எஸ்பி) வேட்பாளர் கோவிந்த் மொகாடே மற்றும் வஞ்சித் பகுஜன் அகாடியைச் சேர்ந்த சந்தோஷ் சால்கே ஆகியோர் களத்தில் உள்ளனர்.

5:56 am, 23 ஏப்ரல் 2026

பாரமதியில் வாக்களித்தார் சுப்ரியா சூலே

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் எம்.பி. சுப்ரியா சூலே பாரமதி பள்ளிக்கூடத்தில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில் இன்று வாக்களித்தார்.

சுப்ரியா சூலே

சுப்ரியா சூலே

5:54 am, 23 ஏப்ரல் 2026

பாரமதி, ரஹூரி இடைத்தேர்தல் 9 மணி நிலவரம்

மகாராஷ்டிரத்தில் உள்ள இரண்டு சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றுவருகிறது.

காலை 9 மணி நிலவரப்படி பாராமதியில் 8 சதவிகிதம், ரஹுரியில் 6 சதவிகிதமும் வாக்குகள் பதிவாகியுள்ளதாகத் தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர்.

5:50 am, 23 ஏப்ரல் 2026

வாக்களித்தார் சுவேந்து அதிகாரி

நந்திகிராம் தொகுதி வாக்குச்சாவடியில் பாஜக வேட்பாளர் சுவேந்து அதிகாரி வாக்கு செலுத்தினார்.

சுவேந்து அதிகாரி

சுவேந்து அதிகாரி

5:06 am, 23 ஏப்ரல் 2026

ஜனநாயக திருவிழாவில் அனைவரும் பங்கேற்க வேண்டும்

பிரதமர் மோடி வெளியிட்டு உள்ள எக்ஸ் வலைதள பதிவில், மேற்கு வங்காளத்தில் முதல்கட்ட வாக்குப்பதிவு இன்று நடக்கிறது. இந்த ஜனநாயக திருவிழாவில் முழு பலத்துடன் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

மேற்கு வங்கத்தில் என்னுடைய இளம் நண்பர்கள் மற்றும் பெண்கள் அனைவரும் அதிக அளவில் வாக்களிக்கும்படி நான் தனிப்பட்ட முறையில் வேண்டுகோளாக கேட்டு கொள்கிறேன். எனப் பதிவிட்டுள்ளார்.

4:57 am, 23 ஏப்ரல் 2026

18.76% வாக்குப்பதிவு

மேற்கு வங்கத்தில் காலை 9 மணி நிலவரப்படி 18.76% வாக்குகள் பதிவாகியுள்ளது.

வட வங்காளம் மற்றும் மாநிலத்தின் தென் பகுதியில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் அமைந்துள்ள 152 தொகுதிகளில் வாக்குப் பதிவு நடைபெற்று வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.