உ.பி.க்கு எதிராக திமுக செயல்படுகிறது! மோடி குற்றச்சாட்டுசீரடியில் விஜய் வழிபாடு!வாக்குப்பதிவுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்! இன்று மாலை 6.30 மணிக்குப் பிறகு வெளியாகும்!திரிணமூல் காங். கட்சியினர் மீது சிஆர்பிஎஃப் தாக்குதல்! மமதா குற்றச்சாட்டுமேற்கு வங்கத்தில் இறுதிக்கட்ட வாக்குப் பதிவு தொடங்கியது!மின்மாற்றிகள் கொள்முதல் முறைகேடு: சிபிஐ விசாரணைக்கு உத்தரவு!கூவாகம் கூத்தாண்டவர் திருக்கோயில் சித்திரைத் தேரோட்டம்! தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,200 குறைந்தது!
/

மேற்கு வங்கம்: சாதனை அளவில் வாக்குப்பதிவு! 9 மணி நிலவரம்!!

மேற்கு வங்கப் பேரவைத் தேர்தல் 9 மணி நிலவரத்தைப் பற்றி...

News image

வாக்குப்பதிவு - படம்: ஏஎன்ஐ

Updated On :29 ஏப்ரல் 2026, 4:55 am

மேற்கு வங்கத்தில் இரண்டாம் கட்ட சட்டப்பேரவைத் தேர்தல் 9 மணி நிலவரத்தை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

294 சட்டப்பேரவைத் தொகுதிகளைக் கொண்ட மேற்கு வங்கத்தில் முதல்கட்டமாக 152 தொகுதிகளுக்கு கடந்த ஏப்.23 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. முன்னெப்போதும் இல்லாத அளவில் 93.19 சதவிகித வாக்குகள் பதிவாகின.

இரண்டாவது மற்றும் இறுதிக்கட்டமாக 142 தொகுதிகளுக்கு இன்று காலை வாக்குப்பதிவு தொடங்கியது. இந்தத் தேர்தலில் 1.64 கோடி ஆண்கள், 1.57 கோடி பெண்கள், 792 மூன்றாம் பாலினத்தவர் என 3.21 கோடி பேர் வாக்களிக்கத் தகுதிபெற்றுள்ளனர். வாக்குப்பதிவுக்காக 41,001 வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

வாக்குப்பதிவு அமைதியாகவும் சுமுகமாகவும் நடைபெறுவதை உறுதி செய்ய 2,321 கம்பெனி மத்தியப் படைகள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

இந்த நிலையில், முதற்கட்ட வாக்குப்பதிவைப் போன்றே இரண்டாம் கட்ட வாக்குப்பதிவிலும் விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. காலை 9 மணி நிலவரப்படி, 18.39 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளதாக இந்தியத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

மேற்கு வங்கத்தில் திரிணாமூல் காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே கடுமையான போட்டி நிலவுகிறது. முன்னதாக, இன்று காலை மேற்கு வங்க எதிர்க்கட்சித் தலைவர் சுவேந்து அதிகாரி பவானிபூர் தொகுதியில் உள்ள வாக்குச்சாவடிகளை ஆய்வு செய்தார். பவானிபூரில் திரிணாமூல் காங்கிரஸ் எம்.பி. அபிஷேக் பானர்ஜி தனது வாக்கைச் செலுத்தினார்.

பூர்பா பர்தமான் சட்டப்பேரவைத் தொகுதியில் 20.86 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன. அதனைத் தொடர்ந்து ஹூக்ளியில் 20.16 சதவிகிதமும், நாடியாவில் 18.50 சதவிகிதமும், வடக்கு 24 பர்கானாஸில் 17.81 சதவிகிதமும், கொல்கத்தா வடக்கு மற்றும் கொல்கத்தா தெற்கு தொகுதிகளில் முறையே 17.28 சதவிகிதமும் 16.81 சதவிகிதமும் ஹவுராவில் 17.76 சதவிகிதமும் வாக்குகள் பதிவாகியுள்ளன.

Summary

West Bengal recorded a voter turnout of 18.39 per cent until 9 am on Wednesday, as polling for the remaining 142 seats across the state commenced earlier in the day.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.