தமிழக தேர்தல்: பிற்பகல் 1 மணி வரை 56.81% வாக்குப்பதிவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!அமைச்சர் அன்பில் மகேஸ் வாக்களித்தார்!மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவு
/

தக்காளி நீண்டநாள் கெடாமல் இருக்க...

நறுக்கிய வாழைக்காய்களைத் தண்ணீரிலேயே  போட்டு வைத்தால்  நாலைந்து நாள்களுக்கு கெடாது.

News image
Updated On :11 பிப்ரவரி 2021, 10:17 am


நறுக்கிய வாழைக்காய்களைத் தண்ணீரிலேயே  போட்டு வைத்தால்  நாலைந்து நாள்களுக்கு கெடாது.

*தக்காளிப் பழங்களை ஒன்றோடு ஒன்று  ஒட்டாமல்  கவிழ்த்து  வைத்தால்  அதிக நாள் கெடாமல்  இருக்கும்.

*பச்சைமிளகாய் ஒரு வாரம்  வரை கெட்டுப் போகாமல்  இருக்க  அதை ஒரு  கண்ணாடி  பாட்டிலில்  போட்டு சிறிதளவு  மஞ்சள்  பொடியும்  சேர்த்துக் காற்றுப் புகாமல்  இறுக்கி மூடவும்.

*வெங்காயத்தை  நைலான் நூலால்  பின்னப்பட்ட  பையில்  போட்டுக் காற்றோட்டமாகக் கட்டித் தொங்கவிட்டால்  நீண்ட  நாள்களுக்குக் கெடாமல் இருக்கும். 

* பூரி, சப்பாத்தி மாவு பிசையும் பாத்திரத்தை தண்ணீர் இல்லாமல் நன்கு துடைத்து விட்டு மாவு போட்டு பிசைந்தால் பாத்திரத்தில் அதிகம் மாவு ஒட்டி வேஸ்ட் ஆகாமல் இருக்கும்

*தோசைப் பொடிக்கு மிளகாய் வற்றலை வறுக்கும் போது சிறிது உப்பு சேர்த்து வறுத்தால் மிளகாய் நெடி வீடு பூராவும் பரவாது.

*பாகற்காய், வெண்டைக்காய், சேப்பங்கிழங்கு போன்ற காய்களை வறுக்கும் போது சிறிது கார்ன்ஃபிளார் சேர்த்து வறுத்தால் மொறுமொறுப்பாக இருப்பதுடன் எண்ணெய் சிறிதும் ஒட்டாமல் இருக்கும். 

*புழுங்கல் அரிசியுடன் தக்காளி பழம் சேர்த்து அரைத்து தோசை வார்த்தால் சுவை அதிகமாக இருக்கும்.

*அரை கப் வறுத்த ரவை, மிக்ஸியில் நொறுக்கிய ரொட்டி அரை கப் இரண்டையும் கலந்து கூடவே துருவிய கேரட், புளித்த தயிர், கறிவேப்பிலை, கொத்துமல்லித் தழை நறுக்கிப் போட்டு தேவையான உப்பும் சேர்த்து இட்லியாக வார்த்து எடுத்து தேங்காய்ச் சட்னி சேர்த்து சாப்பிட பிரமாதமாக இருக்கும்.

*எலுமிச்சைச் சாறு சில துளிகள் மட்டும் தேவைப்படும் போது முழு பழத்தையும் வீணாக்காமல் ஊசியால் சிறுதுளை போட்டு வைத்தால் தேவையான அளவு சாறு பிழிந்து கொள்ளலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.