மிகவும் ஒல்லியாக இருப்பவர்கள். கொழுப்புச் சத்து அதிகரிக்காமல் உடல் எடையைக் கூட்டுவதற்கான உணவுப் பழக்கம் இதோ: (குறைந்தபட்சம் 21 நாள்களாவது இதனை கடைபிடிக்க வேண்டும்)
*அதிகாலை, மிதமான உடற்பயிற்சிக்கு முன்னதாக ஊற வைத்து தோலுரித்த ஐந்து பாதாம் பருப்புகளை தினமும் உட்கொள்ளுங்கள்.
*அவ்வப்போது தண்ணீர் அருந்த வேண்டும். குறைந்தபட்சம் தினமும் ஒன்றரை லிட்டர் தண்ணீராவது குடிக்க வேண்டும்.
*கலவையான பழத்துண்டுகளுடன் தினம் ஒரு பயறு என அவித்த பயறு வகைகள், கொஞ்சம் முந்திரி, சர்க்கரை கலந்த திராட்சை பழரசம் எடுத்துக் கொள்ள விரைவில் உடல் எடை கூடும்.
*காலைவேளையில் மூன்று இட்லி, சர்க்கரை கலக்காத வாழைப்பழ மில்க் ஷேக், ரவா அல்லது சேமியா உப்புமா, சர்க்கரை இல்லாத பைனாப்பிள் ஜுஸ்.
*ஒரு கைப்பிடி உலர்ந்த பழங்கள் அல்லது ஒரு கப் தயிர் அல்லது அவித்த சோளம் அல்லது கொஞ்சம் சீஸ். இவற்றுள் ஏதேனும் ஒன்றை மதிய உணவுக்கு முன்னர் நண்பகலில் சாப்பிடலாம்.
*மதிய உணவுக்கு மூன்று கரண்டி சாதம், சாம்பார், தயிர் சிறிய கிண்ணம். குறைவான எண்ணெய்யில் பொரிக்கப்பட்ட உருளைக்கிழங்கு எடுத்துக் கொள்ளலாம்.
*இனிப்பான பிரெட், பால், ஃபுருட் சாலட் இவற்றில் ஏதேனும் ஒன்றை சாயங்கால ஸ்நாக்ஸ் ஆக உட்கொள்ளலாம்.
*இரவு உணவுக்கு முன்னர், காய்கறி சூப் குடிக்கலாம். நான்கு சாப்பாத்தி, காய்கறி குருமா, தயிர் அல்லது குறைவான தேங்காய் இல்லாத குருமாவுடன் மூன்று ஆப்பம்.
*அசைவ உணவு வகைகள் இரவு நேரத்தில் தவிர்ப்பது நல்லது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மிட்செல் ஸ்டார்க் ஐபிஎல் தொடரில் விளையாட கிரிக்கெட் ஆஸ்திரேலியா அனுமதி..! எப்போது வருவார்?

சென்னையில் 1 மணி வரை 54.58% வாக்குப்பதிவு!

தமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! பிற்பகல் 1 மணி நிலவரம்! - நேரலை!

மேற்கு வங்க பேரவைத் தேர்தல் 2026! 41.11% வாக்குப்பதிவு- நேரலை
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு


