நல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் புதிய தொழில் முதலீடுகளுக்கு ஒப்புதல் நாளை (பிப். 24) நல்ல முடிவை அறிவிப்பேன் : சசிகலாதொகுதிப் பங்கீடு: கனிமொழி - கிரிஷ் சோடங்கர் சந்திப்பு!தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்
/

குடந்தை சகோதரிகளின் இசைப்பயணம்!

சூலமங்கலம் சகோதரிகள், ராதா}ஜெயலட்சுமி சகோதரிகள்,  பாம்பே சகோதரிகள், பிரியா சகோதரிகள், மாம்பலம் சகோதரிகள் வரிசையில் "குடந்தை சகோதரிகள்' என்ற பெயரில் 40 ஆண்டுகளாக இசையுலகில்

News image
Updated On :27 ஜனவரி 2024, 4:36 pm

இடைமருதூர் கி.மஞ்சுளா


சூலமங்கலம் சகோதரிகள், ராதா}ஜெயலட்சுமி சகோதரிகள், பாம்பே சகோதரிகள், பிரியா சகோதரிகள், மாம்பலம் சகோதரிகள் வரிசையில் "குடந்தை சகோதரிகள்' என்ற பெயரில் 40 ஆண்டுகளாக இசையுலகில் பயணித்து வருபவர் டாக்டர் கே.மஞ்சுளா. இந்தப் பெயரைச் சொன்னால் பலருக்கும் தெரியாது. ஆனால், "குடந்தை சகோதரிகள்' என்று சொன்னால்தான் தெரியும். இத்தனைக்கும் இவர்கள் மேற்குறித்தவர்களைப் போல "சகோதரிகள்' அல்லர் என்பதுதான் வியப்பானதும் தனிச்சிறப்பும். டாக்டர் கே.மஞ்சுளாவை சந்தித்துப் பேசியபோது...

உங்களின் குருநாதர் யார்?

என் தாயார் கே.பாமா கண்ணன்தான் என் குரு. அவர் தன் சிறு வயதிலிருந்தே 1965 முதல் குடந்தையில் இசை நிகழ்ச்சிகள் நடத்திக் கொண்டிருந்தார். என் தாயார் கும்பகோணம் சங்கீத வித்வான் சுவாமிநாதப் பிள்ளை, மாயூரம் எஸ்.ராஜம் ஐயரிடமும் இசை பயின்றவர்.

என் தாயாரின் இசை நிகழ்ச்சிகளுக்குச் சென்று, பின்னால் அமர்ந்து சுருதிப் பெட்டி போட்டுக்கொண்டே என் தாயார் பாடுவதைக் கேட்பேன். பிறகு அவரிடம் சின்னச் சின்ன தமிழிசைப் பாடல்களை அடிப்படைப் பாடங்களுடன் கற்றுக் கொண்டேன்.

"குடந்தை சகோதரிகள்' என்ற பெயர் எப்படி வந்தது?

முதன்முதலில் என் தாயாருடன் இணைந்து 1981}ஆம் ஆண்டு சித்திரைத் திருநாளில் சிறப்பு இசை நிகழ்ச்சியாக 4 மணி நேரம் ஒரே மேடையில் பாடினோம். இருவரும் ஒரே மாதிரியான ஆடை அணிந்திருந்ததாலும், வயது வித்தியாசம் தெரியாதபடி உருவத்திலும் ஒத்திருந்ததாலும், ரசிகர்களிடமிருந்து "குடந்தை சகோதரிகள்' என்ற கரகோஷம் எழுந்தது. அன்றுமுதல் அதே பெயரில் அழைக்கத் தொடங்கினர்.

இசைப் பாடல்களை எழுதுவது, இசையமைப்பது பற்றிக் கூறுங்களேன்..

1995 முதல் இசைப் பாடல்களை நானே இயற்றி, இசையமைத்து வருகிறேன். அனைத்து மொழிகளிலும் உள்ள பாடல்களுக்கும் இசையமைத்து வருகிறேன்.
"சங்கீத சங்கதிகள்' என்ற நூல் என் சொந்தப் பாடல்களும், ராக சிறப்புகளையும் கொண்டது. "இசை விநாடி}வினா 500' என்ற நூலில் 3 வயது குழந்தை முதல் இசை தெரியாதவர்களும் கூட வினா}விடையின் மூலம் இசை பற்றித் தெரிந்து கொள்ளலாம். "இசையும் இறைவனும்' என்ற நூல் நான் இயற்றிய பாடல்களுடன் சிவ ஸ்துதி, சுப்ரபாதம் மற்றும் ராகத்தின் மகிமையில் இசையையும் இறைவனையும் இணைத்து விளக்கிய நூல்.

"மார்கழி ராகங்களும் மங்கள பாவைகளும்' என்ற இரு நூல்கள் திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சியில் உள்ள ராகங்களுக்கு முதன்முதலில் ராக லட்சணங்கள் எழுதியது. "இசையின் மகிமை' நூல் 72 மேளகர்த்தா ராகங்களுக்கும் ஸ்வரங்களின் சேர்க்கை வேறுபாடுகள் பற்றி எழுதியது. மொத்தம் இசை குறித்து எட்டு நூல்கள் வெளிவந்திருக்கின்றன.

இசையில் சாகித்யங்கள், ராகங்களின் சிறப்புகளை உரைகளாக எழுதுவது தொடர்பாக விளக்க முடியுமா?

என் தாயாரின் குருவான கும்பகோணம் சங்கீத வித்வான் சுவாமிநாத பிள்ளையும், சங்கீத வித்வான் எஸ்.மாயூரம் ராஜமும் என் தாயாருக்கு சாகித்யங்கள் குறித்த பயிற்சி அளிக்கும்போது, ஒரு நாளைக்கு மூன்று மணி நேரம் வகுப்புகள் நடக்கும் என்று என் தாயார் சொல்வார்.

இசை நுணுக்கங்களைப் பாடும்போது ஒவ்வொரு பாட்டுக்குமான ராகத்தைச் சொல்வார்களாம். அதே முறைப்படியே நானும் என் தாயாரிடம் பயின்றேன். "சங்கீத சங்கதிகள்' என்ற என் முதல் நூலில் உள்ள பாடல்களை என் தாயாகவும், குருவாகவும் இருந்த அவரிடம் பாடிக் காட்டி ஆசீர்வாதம் வாங்கியிருக்கிறேன். மேலும் சங்கீத வித்வான் ஏ.எஸ். பஞ்சாபகேச ஐயர் இல்லத்துக்குச் சென்று என் பாடல்களைப் பாடிக்காட்டி, பாடல்களுக்கான ராகங்கள் பொருத்தமாக உள்ளதா என்பதையும் கேட்டு தெரிந்து கொள்வேன். இவைதவிர, தமிழிசைகளில் 1330 திருக்குறளுக்கும் இசையமைத்து நிகழ்ச்சிகளில் பாடியுள்ளேன்.

உங்கள் குடும்பமே இசைக் குடும்பமோ?

என் தாயாரும் நானும் இசை கலைஞராக ஒரே மேடையில் பாடியிருக்கிறோம். அத்துடன் என் சகோதரன் குடந்தை கே.பாலகிருஷ்ணன் மிருதங்கம், தபேலா தெரிந்த கலைஞர். என் தந்தை டி.டி. கண்ணனும், என் கணவர் கோவை சூர்யநாராயணனும் இசைக் குழுவுக்குப் பக்கபலமாகவும் ஒத்துழைப்பும் தருகிறார்கள் .

புன்னாகவராளி ராகத்தில் மகாகவி பாரதியாரின் "நின்னை சரணடைந்தேன் கண்ணம்மா', வசந்தா ராகத்தில் "அகர முதல எழுத்தெல்லாம்' என்ற திருக்குறள், "நின்னையே ரதியென்று', "செந்தமிழ் நாடெனும் போதினிலே...' என அவர் பாடிய பாடல்கள் காதில் ஒலித்துக்கொண்டே இருக்கின்றன...

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.