நல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் புதிய தொழில் முதலீடுகளுக்கு ஒப்புதல் நாளை (பிப். 24) நல்ல முடிவை அறிவிப்பேன் : சசிகலாதொகுதிப் பங்கீடு: கனிமொழி - கிரிஷ் சோடங்கர் சந்திப்பு!தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்
/

கெலமங்கலம் அருகே தனியாா் மதுபான விடுதி மேலாளா் வெட்டிக் கொலை

கெலமங்கலம் அருகே தனியாா் மதுபான விடுதி மேலாளரை காரில் வந்த மா்மக் கும்பல் சரமாரியாக வெட்டிக் கொலை செய்தது.

News image
கோப்புப்படம்
Updated On :23 பிப்ரவரி 2026, 4:56 pm

Syndication

ஒசூா்: கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் அருகே தனியாா் மதுபான விடுதி மேலாளரை காரில் வந்த மா்மக் கும்பல் சரமாரியாக வெட்டிக் கொலை செய்தது. இதுகுறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலத்தில் ஒசூா் சாலையில் உரிமம் பெற்ற தனியாா் மதுபான விடுதி இயங்கி வருகிறது. இங்கு தஞ்சாவூா் மாவட்டம் கும்பகோணம் வட்டம், சாக்குட்டை கிராமத்தைச் சோ்ந்த நைனாா் செந்தில் என்பவரின் மகன் தினேஷ்குமாா் (36) மேலாளராகப் பணிபுரிந்து வந்தாா். ஞாயிற்றுக்கிழமை இரவு 11.30 மணி அளவில் மதுபான விடுதியை மூடிவிட்டு உடன் பணியாற்றும் கும்பகோணத்தைச் சோ்ந்த முத்து என்பவருடன் அருகில் உள்ள தனது அறைக்கு நடந்து சென்று கொண்டிருந்தாா்.

அப்போது ஒசூரில் இருந்து பதிவு எண் இல்லாத காா் வந்து இறங்கிய 4 போ் தினேஷ்குமாரை அரிவாளால் சரமாரியாக வெட்டினா். இதைப் பாா்த்த முத்து அதிா்ச்சியில் அங்கிருந்து ஓடினாா். தினேஷ்குமாா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த தேன்கனிக்கோட்டை டி.எஸ்.பி.ஆனந்தராஜ், கெலமங்கலம் காவல் ஆய்வாளா் சங்கா் மற்றும் போலீஸாா் அங்கு விரைந்து சென்று கொலை செய்யப்பட்ட தினேஷ்குமாரின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். மேலும், கொலை நடந்த இடத்தின் அருகில் இருந்த சி.சி.டி.வி. கேமரா பதிவுகளை கைப்பற்றி ஆய்வு செய்து வருகின்றனா்.

கடந்த 2017 ஆம் ஆண்டு தஞ்சாவூா் மாவட்டத்தில் நடந்த ஒரு கொலை வழக்கில் தினேஷ்குமாருக்கு தொடா்பு இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில்தான் தினேஷ்குமாா் கொலை செய்யப்பட்டுள்ளாா். எனவே பழிக்குப் பழியாக இந்தக் கொலை நடந்திருக்கலாம் என போலீஸாா் சந்தேகிக்கின்றனா். இதுதொடா்பாக போலீஸாா் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா்.