திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

தொகுதிப் பங்கீடு: கனிமொழி - கிரிஷ் சோடங்கர் சந்திப்பு! பேசியது என்ன?

கனிமொழி - கிரிஷ் சோடங்கர் சந்திப்பு பற்றி...

News image

கனிமொழி - படம் - Express Library

Updated On :23 பிப்ரவரி 2026, 11:28 am

சென்னையில் திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழியை தமிழக காங்கிரஸ் தேர்தல் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் இன்று சந்தித்துப் பேசியுள்ளார்.

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் விரைவில் அறிவிக்கப்படவுள்ளதையொட்டி கூட்டணி மற்றும் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன.

திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகள் குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

நேற்று(பிப்.22) முதல்வர் ஸ்டாலினை காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால் சந்தித்துப் பேசியிருந்தார்.

இதன் தொடர்ச்சியாக இன்று சென்னை சிஐடி காலனியில் உள்ள இல்லத்தில் திமுக எம்.பி. கனிமொழியை தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் சந்தித்துப் பேசியுள்ளார்.

இந்த சந்திப்பு பற்றி கிரிஷ் சோடங்கர் கூறுகையில். "

பல பிரச்னைகள் பற்றி பேசினோம். தொகுதிப் பங்கீடு குறித்து தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். இன்னும் தொகுதிகள் எண்ணிக்கை முடிவாகவில்லை. மாநிலங்களவைத் தேர்தல், உள்ளாட்சித் தேர்தல் குறித்தும் பேசினோம். சரியான நேரத்தில் தொகுதிகள் எத்தனை என்பது குறித்து அறிவிப்போம். ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்பது பற்றியும் பேசியுள்ளோம். ஆனால் அதைவிட தொகுதிப் பங்கீடு முக்கியம்" என்றார்.

கனிமொழி கூறுகையில், "முதலமைச்சரை கே.சி. வேணுகோபால் மரியாதை நிமித்தமாகச் சந்தித்துப் பேசியுள்ளார். திமுகவில் பெண்கள் வீடு, வீடாகச் சென்று பிரசாரம் செய்கிறார்கள். மகளிருக்கான ஆட்சி இது, மகளிருக்கு கிடைக்க வேண்டிய நியாயமான சமூக அங்கீகாரத்திற்கான ஆட்சியாக இந்த ஆட்சி அமைந்துள்ளது. மகளிரின் உரிமைகளுக்காக வரும் தேர்தலில் பெண்களுக்கு அதிக வாய்ப்புகளை வழங்குவார்" என்று தெரிவித்தார்.

Summary

Constituency distribution: Kanimozhi - Girish Chodankar meeting today for alliance discussion

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.