தொகுதிப் பங்கீடு: கனிமொழி - கிரிஷ் சோடங்கர் சந்திப்பு!தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்படிவம்-6 மூலம் 27.5 லட்சம் வாக்காளர்கள் சேர்ப்பு!தமிழ்நாட்டில் 74,07,207 வாக்காளர்கள் நீக்கம்!வாக்காளர் இறுதிப்பட்டியல் வெளியீடு: தமிழகத்தில் 5.67 கோடி வாக்காளர்கள்!கரூர் விஷயத்தில் என் மீது ஏன் பழி போட்டீர்கள்? - முதல்வருக்கு விஜய் கேள்விவிஜய் கொடுத்த வாக்குறுதி; எனக்கும் ஸ்டாலினுக்கும் நடக்கிற போர் இது! - விஜய் பேச்சு தனிச்சின்னத்தில் போட்டி: தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பிறகு மதிமுக அறிவிப்பு சென்னை புறநகர் ரயில்கள் ரத்து! ரயில் நிலையங்களில் அசாதாரண சூழல்! வாக்காளர் இறுதிப் பட்டியல்! சென்னையில் 28.30 லட்சம் பேர்!
/

தமிழகத்தில் மாவட்டவாரியாக வாக்காளர்கள் எண்ணிக்கை! - முழு விவரம்

தமிழகத்தில் மாவட்டவாரியாக வாக்காளர்கள் எண்ணிக்கை பற்றி...

News image
- ENS
Updated On :23 பிப்ரவரி 2026, 10:49 am

இணையதளச் செய்திப் பிரிவு

தமிழகத்தில் எஸ்ஐஆர் பணிகளுக்குப் பிறகு இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு (எஸ்.ஐ.ஆா்.) பிந்தைய வாக்காளா் இறுதிப் பட்டியல் திங்கள்கிழமை (பிப்.23) வெளியிடப்பட்டுள்ளது. தலைமைத் தோ்தல் அதிகாரி அா்ச்சனா பட்நாயக் இதனை வெளியிட்டுள்ளார்.

தமிழகத்தில் அக். 27 நிலவரப்படி 6.41 கோடி வாக்காளர்கள் இருந்த நிலையில் எஸ்ஐஆருக்குப் பின் வெளியான வரைவு வாக்காளர் பட்டியலில் 5.43 கோடியாக குறைந்தது. அதில் மொத்தம் 97.37 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டிருந்தனர்.

தொடர்ந்து இன்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளியான நிலையில், சுமார் 27 லட்சம் வாக்காளர்கள் சேர்க்கப்பட்டு தற்போது தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடியாக உள்ளது.

தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள்: 5,67,07,380.

ஆண்கள்: 2,77,38,925,

பெண்கள்: 2,89,60,838,

மூன்றாம் பாலினத்தவர்: 7,617.

வாக்காளர்கள் நீக்கம்: 74,07,207

வாக்காளர்கள் சேர்ப்பு: 27,53,796

இதைத் தொடர்ந்து மாவட்டவாரியாக வாக்காளர் எண்ணிக்கையையும் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

அதிகபட்சமாக திருவள்ளூர் மாவட்டத்தில் 31,57,413 பேர், அதைத் தொடர்ந்து சென்னையில் 28,30,936 பேர், சேலம் மாவட்டத்தில் 27,55,830 பேர் உள்ளனர்.

1. திருவள்ளூர் - 31,57,413

2. சென்னை - 28,30,936

3. காஞ்சிபுரம்- 11,92,194

4. வேலூர் - 11,33,587

5. கிருஷ்ணகிரி- 15,54,040

6. தருமபுரி- 12,40,108

7. திருவண்ணாமலை - 19,19,159

8. விழுப்புரம் -15,86,653

9. சேலம் - 27,55,830

10. நாமக்கல்- 13,10,951

11. ஈரோடு - 17,40,222

12. நீலகிரி - 5,47,133

13. கோவை - 26,96,813

14. திண்டுக்கல் - 16,72,075

15. கரூர் - 8,45,164

16. திருச்சி - 21,26,303

17. பெரம்பலூர்- 5,55,131

18. கடலூர் - 20,15,796

19. நாகப்பட்டினம்- 5,27,947

20. திருவாரூர் -9,79,652

21. தஞ்சாவூர் - 19,51,445

22. புதுக்கோட்டை - 12,98,907

23. சிவகங்கை - 11,10,599

24. மதுரை - 24,66,954

25. தேனி - 10,33,373

26. விருதுநகர் - 14,97,417

27. ராமநாதபுரம்- 11,23,029

28. தூத்துக்குடி - 13,76,624

29. திருநெல்வேலி - 12,53,264

30. கன்னியாகுமரி - 15,10,550

31. அரியலூர் - 5,22,954

32. திருப்பூர்- 19,55,283

33. கள்ளக்குறிச்சி - 11,09,911

34. தென்காசி - 12,64,411

35. செங்கல்பட்டு - 22,60,036

36. திருப்பத்தூர் - 9,11,599

37. ராணிப்பேட்டை - 9,44,701

38. மயிலாடுதுறை - 7,29,216

மேலும் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி, 01.01.2026-ஐ தகுதியேற்படுத்தும் நாளாகக் கொண்டு, 2026 ஆம் ஆண்டிற்கான வாக்காளர் (Special Intensive Revision SIR. 2026) 27.10.2025 முதல் 23.02.2026 வரை தமிழ்நாடு மாநிலத்தில் மேற்கொள்ளப்பட்டது. இறுதி வாக்காளர் பட்டியல் இன்று (23.02.2026) வெளியிடப்பட்டுள்ளது.

2. 27.10.2025 தேதியின் நிலவரப்படி, 6,41,14,587 வாக்காளர்கள் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றிருந்தனர். சிறப்பு தீவிர திருத்தம், 2026-இன் கீழ் சுணக்கெடுப்பு கட்டம் முடிந்த பிறகு. மொத்தம் 5,43,76,756 வாக்காளர்களின் பெயர்களைக் கொண்ட வரைவு பட்டியல் 19.12.2025 அன்று வெளியிடப்பட்டது. அதைத் தொடர்ந்து, 19.12.2025 முதல் 30.01.2026 வரையிலான ஏற்புரைகள் மற்றும் மறுரைப்புரைகளுக்கான காலத்தில், 27.53 லட்சம் தகுதியுள்ள வாக்காளர்கள் சேர்க்கப்பட்டனர். மேலும் 4.23 லட்சம் தகுதிபெறாத நபர்கள் நீக்கப்பட்டனர். அதன்படி, தகுதியுள்ள வாக்காளர்களைக் கொண்ட 2026-இன் இறுதி வாக்காளர் பட்டியல் 23.02.2026 அன்று வெளியிடப்பட்டது.

3. 23.02.2026 நிலவரப்படி வாக்காளர்களின் எண்ணிக்கை 5,67,07,380 (ஆண்: 2,77,38,925, பெண்: 2,89,60,838; மூன்றாம் பாலினம்: 7,617) ஆகும். இதில் 18-19 வயதுக்குட்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கை 12.51 லட்சம், மாற்றுத்திறனாளிகள் எனக் குறிக்கப்பட்ட வாக்காளர்கள் 4.63 லட்சம் மற்றும் 85 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் வாக்காளர்கள் (85+) 3.99 லட்சம்.

4. மேலும், இறுதி வாக்காளர் பட்டியலின்படி, செங்கல்பட்டு மாவட்டத்திற்குட்பட்ட 27- சோழிங்கநல்லூர் சட்டமன்றத் தொகுதி தமிழ்நாட்டிலேயே அதிக வாக்காளர்களைக் கொண்டுள்ளது. இத்தொகுதியில் மொத்தம் 5,36,991 வாக்காளர்கள் உள்ளனர். (ஆண்கள் 2,62,621 பெண்கள் 2,74,254 மூன்றாம் பாலினத்தவர் 116). இதற்கு அடுத்தப்படியாக திருவள்ளூர் மாவட்டத்திற்குட்பட்ட 6-ஆவடி சட்டமன்ற தொகுதி உள்ளது. இத்தொகுதியில் மொத்தம் 4,28,772 வாக்காளர்கள் உள்ளனர். (ஆண்கள் 2,09,662 பெண்கள் 219.035: மூன்றாம் பாலினத்தவர் 75).

5. தமிழ்நாட்டிலேயே குறைந்த அளவு வாக்காளர்கள் கொண்ட தொகுதியாக சென்னை மாவட்டத்திற்குட்பட்ட 18-துறைமுகம் சட்டமன்றத் தொகுதி உள்ளது. இத்தொகுதியின் மொத்த வாக்காளர்கள் 1,16,896 ஆவர். (ஆண்கள் 58,221; பெண்கள் 58,620; மூன்றாம் பாலினத்தவர் 55). இதற்கு அடுத்தப்படியாக இரண்டாமிடத்தில் சென்னை மாவட்டத்திற்குட்பட்ட 16-எழும்பூர் சட்டமன்ற தொகுதி உள்ளது. இத்தொகுதியின் மொத்த வாக்காளர்கள் 1,34,879ஆவர் (ஆண்கள் 55,677 பெண்கள் 69,149; மூன்றாம் பாலினத்தவர் 53).

5. வாக்காளர் பட்டியலினை, தலைமைத் தேர்தல் அதிகாரியின் வலைதளமான https://elections.in.gov.in என்ற வலைதளத்திலும் காணலாம். அதில் வாக்காளர்கள் தங்கள் பெயரைச் சரிபார்த்துக் கொள்ளலாம்.

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.