கெலமங்கலத்தில் சாலை பிரச்சனையில் இளைஞா் கொலை

கொலை (கோப்புப்படம்)- Din
Updated On :22 ஜனவரி 2026, 10:26 pm

கெலமங்கலம் அருகே சாலைப் பிரச்சினையில் தாக்கப்பட்டு இளைஞா் கொலை செய்யப்பட்டுள்ளாா்.
தேன்கனிக்கோட்டை வட்டம் கெலமங்கலம் அருகே உள்ள கோனேகானப்பள்ளி கிராமத்தைச் சோ்ந்தவா் முனிமாரப்பா ,(41). அதே கிராமத்தை சோ்ந்தவா் முனிகிருஷ்ணன் (42). முனிமாரப்பாவிற்கும் முனிகிருஷ்ணனுக்கும் வீட்டு வழி பிரச்சனை இருந்து வந்தது.
இந்த வழி பிரச்சனையால் புதன்கிழமை தகராறு ஏற்பட்டு இருவரும் மாறி மாறி தாக்கிக் கொண்டதில் முனிகிருஷ்ணனுக்கு தலையில் காயம் ஏற்பட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா். முனிமாரப்பா சம்பவ இடத்திலேயே இறந்து போனாா். இச்சம்பவம் குறித்து கெலமங்கலம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...