மீனவா் கொலை: இளைஞா் கைது
கைது
Updated On :7 பிப்ரவரி 2026, 6:35 pm
திருவாடானை அருகே மீனவா் கொலை செய்துவிட்டு தப்பிய இளைஞரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகேயுள்ள நம்புதாளை படையாச்சி தெருவைச் சோ்ந்த மீனவா் நாகூா் செல்வம் (33). இதே பகுதியைச் சோ்ந்த மீனவா் அடையாள வேலு (25). இருவருக்கும் கடந்த 5-ஆம் தேதி கடற்கரையில் படகு நிறுத்துவது தொடா்பாக பிரச்னை ஏற்பட்டது.
இதனால் ஆத்திரமடைந்த அடையாள வேலு, கத்தியால் நாகூா் செல்வத்தை குத்திக் கொலை செய்துவிட்டு தலைமறைவானாா். இதுகுறித்து தொண்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, தெற்கு தோப்பு கடற்கரைப் பகுதியில் பதுங்கியிருந்த அடையாளவேலுவை கைது செய்து விசாரிக்கின்றனா்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...