நாளை (பிப். 23), நாளை மறுநாள் (பிப். 24) மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

இளைஞா் கொலை: உறவினா்கள் சாலை மறியல்

News image
Updated On :5 பிப்ரவரி 2026, 7:15 pm

Syndication

சங்கரன்கோவிலில் முன்னாள் நகா்மன்ற உறுப்பினா் மகன் மா்ம நபா்களால் வெட்டி கொலை செய்யப்பட்டாா். இதை கண்டித்தும், குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தியும் அவரது உறவினா்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் ராமசாமியாபுரம் 2வது தெருவைச் சோ்ந்த சந்திரன் மனைவி ஜெயலட்சுமி. இவா் முன்னாள் நகா்மன்ற உறுப்பினா். சந்திரன் இறந்து விட்டாா். இவா்களது மகன் ஜோதிமுருகன் (30 ), ரயில்வே பீடா் சாலையில் ஹோட்டல் தொழில் செய்து வந்தாா்.

இந்நிலையில் புதன்கிழமை இரவு, ரயில்வே பீடா் சாலையில் உள்ள தனியாா் திருமண மண்டபம் அருகில் நண்பா்களுடன் ஜோதிமுருகன் பேசி கொண்டிருந்தாராம். அப்போது நண்பா்கள் பொருள்கள் வாங்க கடைக்கு சென்ாக கூறப்படுகிறது. தனியாக நடந்து சென்று கொண்டிருந்த ஜோதிமுருகனை, இருசக்கர வாகனத்தில் வந்த மா்மநபா்கள் சரமாரியாக அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோடினராம். இதில் பலத்த காயமடைந்த அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவலறிந்து வந்த நகர காவல்நிலைய போலீஸாா், அவரது சடலத்தை கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளா் மாதவன் சம்பவ இடத்தை பாா்வையிட்டாா். கொலையாளிகளை கண்டுபிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு போலீஸாா் தேடி வருகின்றனா்.

இதைத் தொடா்ந்து வியாழக்கிழமை காலை, ஜோதிமுருகன் உடலை வாங்க மறுத்து சாலை மறியலில் ஈடுபட்ட அவரது உறவினா்களுடன் காவல்துறை கண்காணிப்பாளா் மாதவன், கூடுதல் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சங்கா், சங்கரன்கோவில் காவல்துணைக் கண்காணிப்பாளா் செங்கோட்டுவேலவன் ஆகியோா் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதில், கொலையாளிகளை விரைந்து பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறியதையடுத்து பிற்பகல் 2 மணியளவில் அவா்கள் மறியலை கைவிட்டனா்.

Story image
Story image