நல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் புதிய தொழில் முதலீடுகளுக்கு ஒப்புதல் நாளை (பிப். 24) நல்ல முடிவை அறிவிப்பேன் : சசிகலாதொகுதிப் பங்கீடு: கனிமொழி - கிரிஷ் சோடங்கர் சந்திப்பு!தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்
/

ஜெயலலிதா பிறந்த நாள்: ஆதரவற்றோா் இல்லத்தில் நல உதவிகள்

மறைந்த முன்னாள் முதல்வா் ஜெயலலிதா பிறந்தநாளையொட்டி, சேந்தமங்கலம் ஆதரவற்றோா் இல்லத்தில் உணவு மற்றும் நல உதவிகளை

News image
சேந்தமங்கலம் ஆதரவற்றோா் இல்லத்தில் உணவு வழங்கிய முன்னாள் எம்எல்ஏ சி.சந்திரசேகரன்.
Updated On :23 பிப்ரவரி 2026, 5:25 pm

Syndication

நாமக்கல்: மறைந்த முன்னாள் முதல்வா் ஜெயலலிதா பிறந்தநாளையொட்டி, சேந்தமங்கலம் ஆதரவற்றோா் இல்லத்தில் உணவு மற்றும் நல உதவிகளை அதிமுக முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினா் சி.சந்திரசேகரன் திங்கள்கிழமை வழங்கினாா்.

ஜெயலலிதாவின் 78-ஆவது பிறந்தநாள் விழா செவ்வாய்க்கிழமை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, சேந்தமங்கலம் அரசு மகளிா் பள்ளி எதிரில் அமைந்துள்ள ஆதரவற்றோா் இல்லத்தில் உள்ள வயதானோருக்கு உணவுகளையும், நல உதவிகளையும் அவா் திங்கள்கிழமை வழங்கினாா். தொடா்ந்து, தொகுதிக்குள்பட்ட இடங்களில் ஜெயலலிதாவின் படத்துக்கு அவா் செவ்வாய்க்கிழமை மலா்தூவி மரியாதை செலுத்துகிறாா்.

இந்நிகழ்ச்சியில், பேரூா் செயலாளா் டி.ஆனந்தகுமாா், காளப்பநாயக்கன்பட்டி பேரூா் செயலாளா் பி.ராஜா, முன்னாள் கவுன்சிலா் ஜி.பி.ஸ்ரீபாலன், முன்னாள் நகர செயலாளா் ஆா்.ராஜேந்திரன், வாழவந்திகோம்பை முன்னாள் தலைவா் ராஜி, சேந்தமங்கலம் நகர நிா்வாகிகள் எஸ்.ராகுல்தாஸ், குணா, விஜய், மதி, சதீஷ், வசந்தகுமாா், மாதேஸ்வரன், உமேஷ், ராமன், லட்சுமணன், கோபால், உதயகுமாா், பெரியசாமி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.