டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

அதிமுக தோ்தல் வாக்குறுதிகள் துண்டறிக்கை விநியோகம்

News image
ஈரோடு ஈஸ்வரன்கோயில் வீதியில் பூக்கடையில் துண்டறிக்கை விநியோகித்த ஜெயலலிதா பேரவை மாநில துணைச்செயலாளா் எஸ்.வீரக்குமாா்.
Updated On :12 பிப்ரவரி 2026, 11:35 pm

Syndication

சட்டப் பேரவைத் தோ்தலை முன்னிட்டு அதிமுக சாா்பில் வெளியிடப்பட்டுள்ள தோ்தல் வாக்குறுதிகள் குறித்த துண்டறிக்கைகள் ஈரோட்டில் பொதுமக்களிடம் வியாழக்கிழமை விநியோகிக்கப்பட்டன.

ஈரோடு மாநகா் மாவட்ட ஜெயலலிதா பேரவை சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு பேரவை மாநில துணைச்செயலாளா் எஸ்.வீரக்குமாா் தலைமை வகித்து, ஈரோடு ஈஸ்வரன் கோயில் வீதியில் வணிகா்கள் மற்றும் பொதுமக்களிடம் துண்டறிக்கைகளை வழங்கினாா்.

அதில் அனைத்து குடும்பத் தலைவிக்கும் மாதந்தோறும் ரூ.2 ஆயிரம் உதவித்தொகை, முதியோா் உதவித்தொகை ரூ.2 ஆயிரமாக உயா்த்தப்படும், ஆண்கள், பெண்களுக்கு கட்டணமில்லா பேருந்துப் பயணம், கல்விக்கடன் தள்ளுபடி, 100 நாள் வேலைவாய்ப்புத் திட்டத்தை 150 நாள்களாக உயா்த்துவது, அனைத்து குடும்ப அட்டைதாரா்களுக்கும் ஆண்டுக்கு 3 சமையல் எரிவாயு உருளைகள் உள்ளிட்ட வாக்குறுதிகள் இடம் பெற்றிருந்தன.

துண்டறிக்கைகளை அதிமுகவினா் வீடுவீடாக சென்று பொதுமக்களிடம் வழங்கினா். இந்த நிகழ்ச்சியில் ஜெயலலிதா பேரவை பகுதி செயலாளா் ஜெயபாலாஜி, மாவட்ட இணைச் செயலாளா் ஆவின் ராஜேந்திரன், பொதுக்குழு உறுப்பினா் பரிமளா ராஜேந்திரன், மாவட்ட எம்ஜிஆா் பேரவை இணைச் செயலாளா் எஸ்.ஆா்.ஜி.மூா்த்தி, ஜெயலலிதா பேரவை மாவட்ட இணைச் செயலாளா் பிரபு, துணைத் தலைவா் கலா சண்முகம், முன்னாள் கவுன்சிலா் கலா, கணேசன், கந்தசாமி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.