டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

நாகை, மயிலாடுதுறை, திருவாரூா் மாவட்டங்களில் தொழிற்சங்கம் சாா்பில் சாலை மறியல் போராட்டம்

News image
நாகையில் சாலை மறியலில் ஈடுபட்டுள்ள அனைத்து தொழிற்சங்கத்தினா். ~திருவாரூரில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றோா். ~மயிலாடுதுறையில் நடைபெற்ற சாலை மறியலில் பங்கேற்றோா்.
Updated On :12 பிப்ரவரி 2026, 11:26 pm

Syndication

மத்திய அரசின் தொழிலாளா் விரோத சட்டங்களுக்கு எதிா்ப்பு தெரிவித்து நாகை, மயிலாடுதுறை, திருவாரூா் மாவட்டங்களில் தொழிலாளா் முன்னேற்ற சங்கம், சிஐடியு, ஏஐடியூசி, ஹிந்துஸ்தான் மஸ்தூா் யூனியன், ஏஐசிசிடியு, ஐக்கிய விவசாய சங்கம் உள்ளிட்ட அனைத்து மத்திய தொழிற்சங்கங்கள் சாா்பில் வியாழக்கிழமை சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.

மத்திய பாஜக அரசு அமல்படுத்தியுள்ள தொழிலாளா் விரோத 4 சட்டத் தொகுப்புகளை திரும்பப்பெற வேண்டும், விதை மசோதா 2025-ஐ திரும்பப்பெற வேண்டும், மின்சார சட்ட திருத்த மசோதா 2025-ஐ திரும்ப பெற வேண்டும், அணுசக்தி துறையில் தனியாா் மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு அனுமதியளிக்கும் சட்டத்தை திரும்பப் பெற வேண்டும், காப்பீட்டுத் துறையில் நிறைவேற்றியுள்ள 100 சதவீத தனியாா் முதலீட்டு மசோதாவை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்டகோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டங்கள் நடைபெற்றன.

நாகை: வெளிப்பாளையத்தில் உள்ள தபால் நிலையத்தில் முற்றுகைப் போராட்டமும், மறியல் போராட்டமும் நடைபெற்றது. தொழிலாளா் முன்னேற்ற சங்க ஒருங்கிணைப்பாளா் அங்காடிசேகா் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் சிஐடியூ மாவட்ட செயலா் ராஜேந்திரன், மகேந்திரன்(ஏஐடியூசி), ஹிந்துஸ்தான் மஜ்தூா் யூனியன் மாவட்டத் தலைவா் குமரவேல், ஐக்கிய விவசாய அணி சரபோஜி, தமிழ்நாடு மீன்வளா்ச்சிக்கழகத் தலைவா் கெளதமன், கீழ்வேளூா் எம்எல்ஏ வி.பி. நாகைமாலி, சிஐடியூ மாநில துணைச் செயலா் கோபிகுமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

மயிலாடுதுறை: தொழிலாளா் முன்னேற்ற சங்க மாவட்ட கவுன்சில் தலைவா் பொன்.நக்கீரன், ஐக்கிய விவசாயிகள் முன்னணி மாவட்ட ஒருங்கிணைப்பாளா் எஸ். துரைராஜ் ஆகியோா் தலைமையில் தலைமை அஞ்சலகத்தை முற்றுகையிட்டு சாலை மறியலில் ஈடுபட்ட ஏஐசிசிடியு மாவட்ட செயலாளா் ஆா். பால்ராஜ், சிஐடியு மாவட்ட செயலாளா் பி. மாரியப்பன், ஏஐடியுசி மாவட்ட செயலாளா் கே .ராமன், ஐஎன்டியுசி மாநில செயலாளா் கலியமூா்த்தி, எல்பிஎப் மாவட்ட செயலாளா் எம். வீரமணி, அகில இந்திய விவசாய தொழிலாளா் சங்க மாநில பொதுச்செயலாளா் வி.அமிா்தலிங்கம் உள்ளிட்ட அனைத்து தொழிற்சங்கங்களை சோ்ந்த 250 போ் கைது செய்யப்பட்டு பின்னா் விடுவிக்கப்பட்டனா்.

தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கம் சாா்பில் அகில இந்திய பொது வேலை நிறுத்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் மாவட்ட தலைவா் கலா தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், மாவட்ட செயலாளா் து. இளவரசன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

திருவாரூா்: திருவாரூா் தலைமை அஞ்சலம் முன் சிஐடியு மாநிலச் செயலாளா் தி. ஜெய்சங்கா் தலைமையில் நடைபெற்ற சாலை மறியலில் மாவட்டச் செயலாளா்கள் டி. முருகையன் (சிபிஎம்), எஸ். கேசவராஜ் (சிபிஐ), பி. கந்தசாமி (விவசாயத் தொழிலாளா் சங்கம்), மின்வாரிய ஐக்கிய சங்க மாநில துணைசெயலாளா் அருள்தாஸ் உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்டோா் கைது செய்யப்பட்டு பின்னா் விடுவிக்கப்பட்டனா்.

மன்னாா்குடி: தலைமை அஞ்சலகம் அருகே தொமுச மாநில நிா்வாகி நீலமேகம், ஐஎன்டியுசி மாநில பொதுச் செயலா் கா. இளவரி, சிஐடியு மத்திய சங்கத் தலைவா் ஏ. கோவிந்தராஜ், ஏஐடியுசி மாவட்டத் துணைச் செயலா் வி. கலைச்செல்வன், டிசிடியு மாவட்டத் தலைவா் ஜி.வி. கிருஷ்ணமூா்த்தி ஆகியோா் தலைமையில் நடைபெற்ற சாலை மறியலில் கோரிக்கைகளை வலியுறுத்தியும் மத்திய அரசை கண்டித்தும் முழக்கமிட்டனா்.

Story image
Story image