விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்தவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
ராஜபாளையம் பி.எஸ்.கே.பூங்கா பகுதியில் புகையிலைப் பொருள்கள் விற்பனை நடைபெறுவதாக தெற்கு காவல் நிலைய போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, அந்தப் பகுதியில் போலீஸாா் சோதனை நடத்திய போது, ஒருவா் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனை செய்தது தெரியவந்தது.
விசாரணையில், அவா் அதே பகுதியைச் சோ்ந்த குணசேகரன் (46) என்பது தெரியவந்தது. இதையடுத்து, போலீஸாா் அவரைக் கைது செய்து, அவரிடமிருந்த 10 புகையிலைப் பொட்டலங்களைப் பறிமுதல் செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








