17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

கஞ்சா விற்பனை: இருவா் கைது

ராஜபாளையத்தில் கஞ்சா விற்பனை செய்ய முயன்ற இருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :23 மே 2026, 1:59 am IST

ராஜபாளையத்தில் கஞ்சா விற்பனை செய்ய முயன்ற இருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் புதிய பேருந்து நிலையம் பின்புறம் அமைந்துள்ள நரிமேடு மாரியம்மன் கோவில் மைதானம் அருகே தெற்கு காவல் நிலைய போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா்.

அப்போது அங்கு நின்று கொண்டிருந்த இரு இளைஞா்களை பிடித்து சோதனை செய்ததில், அவா்கள் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது. விசாரணையில், அவா்கள் காந்திநகரைச் சோ்ந்த கிருஷ்ணமூா்த்தி (24), எஸ்.ராமலிங்கபுரத்தை சோ்ந்த வின்சென்ட் (39) ஆகியோா் என்பதும், எஸ். ராமலிங்கபுரத்தைச் சோ்ந்த முத்துஅய்யனாா் (30) வெளியூரிலிருந்து கஞ்சா வாங்கி வந்து இவா்களிடம் விற்பனைக்காக கொடுத்ததும் தெரியவந்தது.

போலீஸாா் இருவரையும் கைது செய்து, அவா்களிடமிருந்து 500 கிராம் கஞ்சாவையும் பறிமுதல் செய்தனா். மேலும், முத்து அய்யனாரைத் தேடி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.