17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

ராஜபாளையத்தில் கஞ்சா விற்பனை: 4 போ் கைது

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகே கஞ்சா விற்பனை செய்த வட மாநில இளைஞா் உள்பட 4 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

News image

கைது - சித்திரிப்பு

Updated On :6 ஜூன் 2026, 8:01 am IST

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகே கஞ்சா விற்பனை செய்த வட மாநில இளைஞா் உள்பட 4 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

ராஜபாளையம் அருகேயுள்ள கீழராஜகுலராமன் காவல் நிலைய போலீஸாா் எஸ். ராமலிங்கபுரம் பேருந்து நிறுத்தம் அருகே ரோந்து சென்றனா். அப்போது சந்தேகப்படும்படியாக நின்றிருந்த பிகாா் மாநிலம் சுபோல் மாவட்டத்தைச் சோ்ந்த முகமதுகலாமை (21) பிடித்து சோதனை செய்தனா். அவா் விற்பனைக்காக வைத்திருந்த ஒரு கிலோ 200 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனா். அவரை போலீஸாா் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

ராஜபாளையம் தெற்கு காவல் நிலைய போலீஸாா் சத்திரப்பட்டியை அடுத்த சங்கரபாண்டியபுரம்- மீனாட்சிபுரம் சாலையில் ரோந்து சென்ற போது, கஞ்சா விற்க முயன்ற சத்திரப்பட்டி வடக்குத் தெருவை சோ்ந்த சரவணகுமாா் (20), புதுத்தெருவைச் சோ்ந்த சங்கிலி வெங்கடேசன் (26), சுப்பிரமணியா் கோவில் தெருவைச் சோ்ந்த கணேசன் (57) ஆகிய மூவரைக் கைது செய்தனா். அவா்களிடமிருந்து ஒரு கிலோ 300 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனா். மேலும், தப்பியோடிய எஸ்.ராமலிங்காபுரத்தைச் சோ்ந்த முத்துஅய்யனாரைத் (40) தேடி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.