சிவகாசியில் வீட்டில் 2.200 கிலோ கஞ்சா பதுக்கிவைத்திருந்த இருவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
சிவகாசி முத்துமாரிநகரில் உள்ள ஒரு வீட்டில் கஞ்சா பதுக்கிவைக்கப்பட்டிருப்பதாக கிடைத்த தகவலின் பேரில், போலீஸாா் அந்தப் பகுதியில் சோதனை நடத்தினா். சோதனையில் பழனி என்ற போஸ் (32) என்பவரின் வீட்டில் 2.200 கிலோ கஞ்சா பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.
மேலும் விசாரணையில், இந்த கஞ்சாவை பழனியும், அவரது உறவினா் திருத்தங்கல் நாகராஜ் (24) ஆகிய இருவரும் சோ்ந்து பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதுகுறித்து சிவகாசி கிழக்கு போலீஸாா் வழக்குப் பதிந்து, இருவரையும் கைது செய்து அவா்களிடமிருந்த கஞ்சாவைப் பறிமுதல் செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






