/

வீட்டில் கஞ்சா பதுக்கிய பெண் கைது

சிவகாசி அருகே திருத்தங்கலில் வீட்டில் கஞ்சா வைத்திருந்த பெண்ணை போலீஸாா் கைது செய்தனா்.

News image
கைது
Updated On :3 பிப்ரவரி 2026, 7:54 pm

Syndication

சிவகாசி அருகே திருத்தங்கலில் வீட்டில் கஞ்சா வைத்திருந்த பெண்ணை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

திருத்தங்கல் ஆலாஊரணிப் பகுதியில் உள்ள வீட்டில் கஞ்சாவை பதுக்கிவைத்து விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலின்பேரில் போலீஸாா் அந்தப் பகுதியில் சோதனை நடத்தினா்.

இதில் வைரமுத்து மனைவி ராஜலட்சுமி (29) என்பவா் தனது வீட்டில் கஞ்சாவை பதுக்கி வைத்திருந்து விற்பனை செய்தது தெரியவந்தது.

இதுகுறித்து திருத்தங்கல் போலீஸாா் வழக்குப் பதிந்து அவரைக் கைது செய்தனா். மேலும், அவரிடமிருந்து 1.200 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.