அத்தியாயம் 28 - நடுகற்கள் வகைகளும் வகைப்பாடும் - 21
தாய் தெய்வ வழிபாடு, ஆதிவேட்டைச் சமூகத்தில் இருந்து இன்றைய நவீன காலம் வரை தொடர்ச்சியாகப் பல்வேறு பெயர்களில் பல்வேறு வடிவங்களில் வழக்கில் இருந்து வருகிறது என்பதை நினைவுபடுத்திக்கொள்ளலாம். மறுப்பதற்கில்லை. இப்பின்னணியில், நமக்குக் கிடைத்துவரும் தொல்பொருட்களில், தாய் தெய்வங்களுடன் தொடர்புடையவை யாவும் வழிபாட்டுக்குரிய சித்தரிப்பு அல்லது காட்சிப்படுத்தும் உருவங்களேயன்றி வேறில்லை.












