நீதியைத் தேடி: லூர்து எஸ் ராஜ்


நீதியைத் தேடி மக்கள்
நீண்ட தூரம் அலைந்திட வேண்டுமா— உச்ச
நீதி மன்றகிளை அருகினில் அமைந்திட வேண்டாமா ?
நீதியைத் தேடி நீண்டநாட்கள்
நிம்மதி யற்றிருக்க வேண்டுமோ—அதை
அம்மட்டாக ஆய்ந்து கூறும் நீதி மன்றங்கள் வேண்டாமா ?
வக்கீல் வாய்தாக் கட்டணமிங்கு
வானத்தை தொட்டிட வேண்டுமா—வறியோர்
வழக்கின் கட்டண மெல்லாம் அரசே செலுத்திட வேண்டாமா?
மக்கள் தொகையும் கோடியாய்ப் பெருக
அக்கால எண்ணிக்கை போன்று – மன்றங்கள்
அந்நியர் காலத்தைப்போல் குறைவாய் இருந்திடலாகுமா?
சொத்துக் குவிப்பு வழக்கெல்லாம்
சோர்ந்து நீர்த்துப் போகவோ? நடுநிலை நின்று நீதி
சொன்ன நடுவரின் தீர்ப்பை நிலை நாட்டிட வேண்டாமா ?.
மாட்டுத் தீவன ஊழல் கள்ள
நோட்டை அச்சிட்ட வழக்கு கிரானைட் மணல் ஹவாலா டூஜிஎன
ஏட்டை நிரப்பிடும் வழக்குகள் தீர்வது எப்போதோ?
அரசியல் தலைவரின் அங்குசமெனும்
கூரிய லோக்ஆயுக்தா வேண்டாமா—அவர்
குற்ற ஊழலில் விரைவில் சிறைப்பட வேண்டாமா ?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...