நீதியைத் தேடி " ரீகன். ஜெயக்குமார்


மனிதம் தேடும்மனிதா அதனைத் தேடி
தனியாகச் சுற்றுகிறது இவ்வுலகு
நீதியைத் தேடி நெடுநாள் அலைந்தவனே
நீதியே நீதியைத் தேடி ஓடுகிறதே.
நல்லார் மதிக்கும் நடுவுநிலமையைத் தேடும்
பொல்லாப்பெதற்கு உனக்கு
அதிகார வெறியரிடம் அன்பைத் தேடி
அலையாதே அது உன் பேதமை.
இன்னுமா தேடுகின்றாய் மானிடனே
தன்னையே ஒறுத்து தனியாக
இன்னுமா தேடுகின்றாய்.
தேடலில் வளைந்த முதுகு
தேர்ச்சில்லாய் வளைந்து
காடேறும் முதுமையைக்
காட்டி நின்ற போதும்
தேடலை விடவில்லை நீ
தென்பட்டால் சொல்லுகிறேன்
பாடாகப் பட்ட பாடு சொல்லப்
பார்த்திருக்கின்றாய் என்று.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...