கட்சியின் பெயரை மட்டும் விரைவில் அறிவிக்கிறேன்: என் முயற்சியில் எந்தவித மாற்றத்திற்கும் இடமில்லை - சசிகலாராமநாதபுரத்தில் புதிய கட்சி தொடங்கினார் சசிகலா : அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களுடன் கொடி அறிமுகம்9 ஆண்டுகளாக அமைதியாக இருந்ததைப்போல இனியும் இருக்க முடியாது : சசிகலாசென்னையில் ஆயிரம் விளக்கு, தி.நகர், வேளச்சேரி தொகுதிகளில் போட்டியிட பாஜக விருப்பம் எனத் தகவல்சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அதிமுகவிடம் 72 தொகுதிகள் அடங்கிய பட்டியலை பாஜக வழங்கியதுதிமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை: குழு அமைத்தது இந்திய கம்யூ. கட்சி!கல்லாப்பெட்டி கூட்டணி - எங்கள் தகுதிக்கு விஜய்க்கு பதில் சொல்ல வேண்டிய தேவை இல்லை : ஆர்.எஸ்.பாரதிஒவ்வொரு முறையும் மீண்டெழுவதைப்போல மீண்டும் திரும்புவார் நல்லகண்ணு : வைகோஅதிமுக ஆட்சிக்கு வராது என்ற நம்பிக்கையில் அறிவிப்பை வெளியிடுகிறார் எடப்பாடி பழனிசாமி : திருமாவளவன்பயணிகள் வசதிக்காக 26 குறுகிய தூர மின்சார ரயில்கள் இயக்க முடிவு : தெற்கு ரயில்வேஅதிதீவிர கண்காணிப்பில் நல்லகண்ணு: ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை தகவல்கேரள மாநிலத்தின் பெயரை 'கேரளம்' என்று மாற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல்சென்னை புறநகர் ரயில்கள் ரத்து: ரயில்வே மெத்தனமாக செயல்படக் கூடாது! - கனிமொழிகுமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவாயில் திறப்பு!பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புகடும் சரிவில் பங்குச்சந்தை! 700 புள்ளிகள் குறைந்த சென்செக்ஸ்!பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு!கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்; தனிக்கட்சி தொடங்கமாட்டேன்: ஓபிஎஸ்எதிர்க்கட்சித் தலைவரா? அல்லது இந்தியாவை எதிர்ப்பவர்களின் தலைவரா? ராகுல் மீது பாஜக எம்.பி. கடும் தாக்கு!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்!மணிப்பூரில் இடம்பெயர்ந்த மக்களுக்கு 5,000 வீடுகள்: மத்திய அரசு ஒப்புதல்!கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!
/

 நீதியைத் தேடி: -பெருமழை விஜய்,

News image
Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:16 pm

கவிதைமணி

நல்லாயிருந்த நாட்டு முதல்வர்
நள்ளிரவில் மருத்துவமனை போகிறார்!
75 நாட்கள் நிபுணர்கள் சிகிச்சை!
இருந்தும் இறுதியில் இறந்து போகிறார்!
நடந்தது என்ன?

மன்னார்குடி மாபியா ஒன்று
சென்னையில் உலாவுவதாகச் செய்தி!
மந்திரிகளும் அதிகாரிகளும் 
மாபியாக் கும்பலுடன் ஒட்டுறவாம்!
நடப்பது என்ன?

இறந்த அம்மாவுக்கு இவர்
இரத்த பந்த உறவாம்!
எனவே இவரே இனிய தமிழகத்திற்குத்
தலைமை ஏற்க வேண்டுமாம்!
இதுதான் மக்களாட்சியா?

ஒரே இரவில் பெருமதிப்பு நோட்டுகள்
செல்லாத தாகிப் போக...சிரமத்தில் ஏழைகள்!
சேகர் வீட்டில் மட்டும் 34 கோடி புது நோட்டுகள்!
வந்தது எப்படியென்று தெரிய வேண்டாமா?
அரசாங்கம் என்ன செய்கிறது?

மணலையும் மதுவையும் விற்பனை செய்து
கோடிக்கணக்கில் அரசு சேர்த்தது!
நூற்றுக்கும் மேலாய் விவசாயிகள் சாவு!
ரெட்டி...ராவ்கள் வீடுகளில் புதையல்!
இதற்குப் பெயர்தான் ஜனநாயகமா?

ஏறு தழுவுதல் இளைஞரின் அடையாளம்!
ஐயாயிரம் ஆண்டின் பாரம்பரியம்!
அரசும் கோர்ட்டும் அதில் தலையிட
உண்மையாய்ப் பார்த்தால் உரிமையேயில்லை!
இதன் பெயர்தான் ஜனநாயகப் படுகொலையோ?!

இரவிலும் பனியிலும் இளைஞர்கள் சாலைகளில்!
எந்த இடத்திலும் இல்லை அத்துமீறல்!
காக்கிச் சட்டைகள் கம்பு சுழற்றி... காலொடித்தது 
அத்துமீறலின் ஆவேச வேட்டை!அமர்ந்திருப்போரை 
அடிப்பதா வீரம்?!

நீதியைத் தேடியே கோர்ட்டை  அணுகினால்..
அங்கும் அரசியல்!அதீத தாமதம்!தாமதப்படும் நீதி அநீதியே!
தீர்ப்புகள் வழங்க கால நிர்ணயம் நிச்சயம் வேண்டும்!
அப்பொழுதாவது அநீதி இழைப்போர் ஒடுங்க வாய்ப்புண்டு!
இதற்கெல்லாம் விடிவு எப்போது?!

எம்.எல்.ஏ.,க்கள்,எம்.பி.,க்கள் தேர்ந்தெடுக்கப் பட்டது...
மக்கள் நலம் காக்கவா?மாபியாக்களுடன் கை கோர்த்து...
கல்லூரி, பள்ளிகள் நடத்திக் கொள்ளை அடிக்கவா?
வெட்கத்தை உதிர்த்த இந்தக் கல்வி வேந்தர்கள்
வேட்டி கட்டவும் தடை செய்யலாமோ?!

இளைஞர்களே உங்கள் எழுச்சி ஓங்குக!
இதுவே உங்கள் ஆரம்பமாக இருக்கட்டும்!
ந தி நீர் இணைப்பிலும் நல்லது நடக்கவும் 
தொடர்ந்து நீங்கள் இணைந்து போராட வேண்டும்!
ஆதரவுக்கு நாங்கள் இருக்கிறோம்!

மேலே சொன்ன அத்தனை அநீதியும் இங்கு 
ஆழமாய் நன்கு வேரூன்றி யுள்ளது!


நீதியைத் தேடி இளைஞர் அனைவரும்
கோதாவில் மொத்தமாய்
குதித்தே தொடர்ந்து போராடியும் வருகின்றனர்!
கிடைக்கணும் நல் நீதி!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.