இஸ்ரேலின் சொட்டுநீர் பாசனம் இந்தியாவிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது: இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் மோடி பேச்சு இந்திய கலாசாரத்தில் யூதர்களின் பங்கு முக்கியமானது : இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் மோடி பேச்சுஇஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உடனான சந்திப்பு மிகச்சிறப்பானதாக இருந்தது: பிரதமர் மோடிஅனைவராலும் மதிக்கப்பட்டவர் நல்லகண்ணு : பிரதமர் இரங்கல்நல்லகண்ணு உடலுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் அஞ்சலி!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 1 காசு குறைந்து ரூ. 90.96 ஆக நிறைவு!நல்லகண்ணு உடலுக்கு முழு அரசு மரியாதை! முதல்வர் அறிவிப்பு!
/

கைகோர்ப்போம்: கவிஞர்.கோவிந்தராஜன் பாலு

News image
Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:20 pm

கவிதைமணி

விவசாயம்தீக்கிரையாய்விளைச்சல்இல்லை.
விவசாயி குடும்பத்தில் விளைந்த கோரம். 
கவலைகள்வாழ்க்கையில்கனலாய்க்காண 
கண்ணீரும் வறண்டதால்கண்டோம்சோகம். 
தவமாகத்தாவிவரும்தண்ணீர்இல்லை 
தடுப்பணைகள்உயர்த்திட்டார்தடைகள்போட்டு. 
விவரங்கள் சொன்னாலும் வெறுப்பே காட்ட 
வேண்டுதல்கள் கிட்டிடுமோ விரைந்து வாரீர். 

தாகத்தில் வாடித்தான் தண்ணீர் கேட்டும் 
தரவில்லை வாடுகின்றோம் தாகத் தாலே. 
மேகங்கள் ஓடித்தான் ஒளியக் கண்டேன்.
 மேமாத வெயிலாலே மேனி வாட 
தேகத்தில் குருதியோட்டம் தேங்கி நிற்க 
தேடித்தான் தண்ணீரால் தீயாய் வாடி
 வேகமாக வாருங்கள் விரைந்து பேசி 
வென்றிடவே கைகோர்த்து வெல்வோம் வாரீர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.