இஸ்ரேலின் சொட்டுநீர் பாசனம் இந்தியாவிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது: இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் மோடி பேச்சு இந்திய கலாசாரத்தில் யூதர்களின் பங்கு முக்கியமானது : இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் மோடி பேச்சுஇஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உடனான சந்திப்பு மிகச்சிறப்பானதாக இருந்தது: பிரதமர் மோடிஅனைவராலும் மதிக்கப்பட்டவர் நல்லகண்ணு : பிரதமர் இரங்கல்நல்லகண்ணு உடலுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் அஞ்சலி!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 1 காசு குறைந்து ரூ. 90.96 ஆக நிறைவு!நல்லகண்ணு உடலுக்கு முழு அரசு மரியாதை! முதல்வர் அறிவிப்பு!
/

கைகோர்ப்போம்: அழகூர். அருண். ஞானசேகரன்

News image
Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:20 pm

கவிதைமணி

ஊர்மக்கள்  கைகோர்ப்போம்  உரிமைதனைக்  கோற ,         உரிமைதனைப் பெற்றிடுவோம்  உயர்வுதனைக்  காண !கார்பொழிய  வில்லையென  பெய்யதனைக்  கூறி         கன்னடியர்  நீரைக்கொண்டும்  மறுப்பதெலாம்  அவலம் !தீர்க்கமுடன்  நீதிமன்றம்  ஆய்ந்ததன்பின்  தந்த         தீர்ப்புதன்னை  மதியாமல்  இருப்பதுவோ  இன்னும் ?யார்இதனை  செயல்படுத்தத்  தக்கவராம் , கண்டும்         ஏன்தானோ  மோடியின்னும்  காப்பதுவோ  மௌனம் ?கன்னடியர்  அரசாங்கம்  தன்னையின்றுக்  கலைக்கும்         கடமைதனை  ஆற்றவேண்டும்  மோடிதனின்  அரசும் !என்னவொரு  திமிரிருந்தால்  தீர்ப்புதனைப்  பெற்றும்         இல்லைநீர்  என்பதுவோ  அவர்களெலாம்  இன்றும் ?பன்னெடுங்  காலமதாய்  காவிரியின்  நீரைப்         பகிர்ந்திட்ட  தெல்லாமும்  பழங்கதைகள்  தானோ ?இன்னதெலாம்  கொடுமையென  உணர்திடாமல்  மோடி         இருப்பதுமேன்  பதவிதனில்  வாய்தன்னை  மூடி ?எத்தனையோ  பிரச்சனைகள்  தமிழர்நம்  முன்னாலே        இருப்பதனை மறப்பதுவோ, வெற்றிகொள  வேண்டாமோ?உத்தமமோ  அன்னவர்கள்  நீரைத்தர  மறுப்பதுவும் ,        உரிமைதனை  மீண்டும்பெற  போரிடவும்  தயங்குவதோ ?இத்தனைநாள்  பொறுப்புடனே  இருந்திட்டக்  கேரளத்தார்        இன்றுசிறு  வாணிநீரை  ஏன்தடுக்க  முனைவதுவோ ?அத்தனைப்  பிரச்சனைகள்  தனிலும்நாம்  வெற்றிபெற        ஆர்பரித்துக்  கைகோர்ப்போம் , அதிரட்டும்  போர்முரசும் !வையத்துள்  தலைசிறந்த  தமிழ்நாடு  தன்னின்         வளமெலாம்  காவிரியின்  கொடைத்திறன்  தன்னால் !பொய்த்திட்டக்  காவேரி  தனையின்று  கண்டோம் ,         பொலிவுதனை  இழந்ததே  தஞ்சைவள  நாடும் !மெய்யான  வளமதனை  நாம்காண  வேண்டும்         மேலான  நம்வுரிமை  தனைமீட்க  வேண்டும் !கைகோர்த்துப்  போரிட்டு  வெற்றிபெற  வருக,         கடமைதனை  உணர்ந்திட்டு  ஆதரவைத்  தருக !ஊழல்தனை  ஒழித்திடக்  கைகோர்ப்போம்  என்னும்         உறுதிதனை  நம்பிட்டு  வாக்குதனை  இட்டோம் ;பாழடையக்  காணுதின்று  நாட்டின்நிதி  நிலைமை         பசலிகள்  தமைத்தேர்ந்தப்  பலனுமிது  தானோ ?எழுமூன்று  மாதங்கள்  தொடர்ச்சியாய்  நாடிதன்         ஏற்றுமதித்  திறனதும்  சரிவதனைக்  காண்க !மோழைகளின்  ஆட்சியின்  திறனிதுவும்  தானென         முன்னேற்றம்  என்பதெலாம்  கானல்நீர்  தானே !உறவுக்குக்  கைகோர்த்து  உரிமைக்குக்  குரல்கொடுக்கும்திறங்கொள்வோம்  மனதினிலே  தீர்க்கமுடன் !---பிறர்நம்மைஏய்த்திடநாம்  பொறுப்பதுவோ,  இளைத்தவரோ  தமிழ்மக்கள் ; காய்ந்திட்ட  தஞ்சைமண்ணைக்  காண் !சசிகலா  கைகோர்த்து  சழக்கேற்று  ஜெயலலிதாநசிவுறவே  கண்டதெலாம்  நற்செயலோ?---பசித்தாலும்,புல்லதனைத்  தின்றிடுமோ  புலியதுவும்  சிங்கமதும் ;இல்லையொரு  போதுமென்றே  இயம்பு !கயவருடன்  வேண்டாதக்  கைகோர்க்க  நேர்வதெலாம்நயமற்ற  செயலென்பர்  நல்லோர்கள் !---சுயமாகச்சிந்தித்து  என்றென்றும்  சிறப்பான  வளமடைதல்வந்திக்கத்  தக்கதல்ல  வா ?கருத்துடனே  ஆய்ந்துபின்  கைகள்தனைக்  கோர்ப்பதுவேபொறுப்பான  செயலென்றும்  புரியட்டும்! --- சிறிதும்நாம்பின்னாளில்  வருத்தமுறும்  பிழைநேரா  திருக்கட்டும் ;இன்னதுவே  நல்லதென்  றெண் !கைகோர்த்து  நாமெல்லாம்  காலமெலாம்  அமைதிகாக்கமெய்யான  வளம்பெறுவோம், மேன்மையுறக்  கண்டிடுவோம் ;பொய்யான  மதவாதம்  பொலிவிழக்கச்  செய்துவிடும் ;செய்வதனை  திருத்தமுடன்  செய்வதன்றோ  நம்கடமை !                    

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.