இஸ்ரேலின் சொட்டுநீர் பாசனம் இந்தியாவிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது: இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் மோடி பேச்சு இந்திய கலாசாரத்தில் யூதர்களின் பங்கு முக்கியமானது : இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் மோடி பேச்சுஇஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உடனான சந்திப்பு மிகச்சிறப்பானதாக இருந்தது: பிரதமர் மோடிஅனைவராலும் மதிக்கப்பட்டவர் நல்லகண்ணு : பிரதமர் இரங்கல்நல்லகண்ணு உடலுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் அஞ்சலி!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 1 காசு குறைந்து ரூ. 90.96 ஆக நிறைவு!நல்லகண்ணு உடலுக்கு முழு அரசு மரியாதை! முதல்வர் அறிவிப்பு!
/

கைகோர்ப்போம்: - ச.கிறிஸ்து ஞான வள்ளுவன்

News image
Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:20 pm

கவிதைமணி

இயற்கையை அழிக்கும் 
அரக்கர்களை ஒழிக்க
ஒன்றாய் கைகோர்ப்போம் 
இயற்கை அன்னை மகிழ்வாள்.

கல்வியைக் காசாக்கும் 
கல்வி வியாபாரிகளை
கம்பிக்குள் தள்ள கைகோர்ப்போம் 
ஏழை மாணவர்கள் மகிழ்வார்கள். 

அரிசிக்குள் கல்லையும் 
பாலுக்குள் நீரையும் மட்டுமல்ல 
எல்லாவற்றுக்குள்ளும் எதையாவது கலப்போரை
எதிர்க்க கைகோர்ப்போம்.

ஓட்டுக்கு பணம் வழங்கி
பணம் சம்பாதிக்கவே போட்டியிடும்
வேட்பாளருக்கு எதிராய் கைகோர்ப்போம் 
தோல்வியை அவர்க்குப் பரிசளிப்போம்.

மலையாய் ஒதுக்கும் நிதி
துளியாய்ப் போய்ச் சேர
காரணமான ஊழல்வாதிகளை 
உதாசீனப்படுத்த கைகோர்ப்போம்.

நாம் கோர்க்கும் கையின் நோக்கம் 
மற்றவர்களை ஈர்த்து 
நம்மிடம் சேர்க்குமேயானால்
வெற்றி சாத்தியமே நமக்கு !

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.