வழிதவறிய பயணங்கள்: கே. அசோகன்

Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:15 pm

மதுவெனும் போதைக்குள் மயங்கிமாளாத துன்பத்தை ஏற்றிடுவார்இது ”தகுமோ” என்றே கேட்டிடின்இன்பம் இதில்தான் என்றிடுவார்!புதுப்புது தத்துவங்கள் உதிர்த்தேபொழுதினை விணாக போக்கிடுவார்பதமாக சொன்னாலும் பாராமலேபோதையிலே தள்ளாடி நின்றிடுவார்இல்லத்தில் ஏழ்மையும் குடியிருக்கஎனக்கென்ன என்றே இயம்பிடுவார்வெல்லமாய் இனிக்கின்ற மழலையின்வெள்ளந்தி சிரிப்பினை தவிர்த்திடுவார்நல்உள்ள நண்பர்கள் நட்பினையேநன்றாகத்தான் வெட்டியே விட்டிடுவார்கல்லறையின் வழிதேடி கணக்காககால்வைப்பார் வழிதவறிய பயணமாய்சாராய வாடையிலே மிதப்பவருக்குசந்தனமும் சாக்கடையும் ஒன்றேதான்ஓராயிரம் வார்த்தைகள் உரக்கவேஉரைத்தாலும் காதுக்குள் ஏறவே ஏறாதுதீராத நோய்களை தானாகவேதேடித்தான் உடலுக்குள் சேர்த்திடுவார்!சீர்பாதை செல்லாமல் சீரழிந்தேசென்றிடுவார் வழிதவறிய பயணங்களாய்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...