நல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் புதிய தொழில் முதலீடுகளுக்கு ஒப்புதல் நாளை (பிப். 24) நல்ல முடிவை அறிவிப்பேன் : சசிகலாதொகுதிப் பங்கீடு: கனிமொழி - கிரிஷ் சோடங்கர் சந்திப்பு!தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்
/

நாளை நல்ல முடிவை அறிவிப்பேன் : சசிகலா

பசும்பொன்னில் நாளை நல்ல முடிவை அறிவிக்கிறேன் என சசிகலா தெரிவித்துள்ளது குறித்து...

News image
சசிகலா- கோப்புப் படம்
Updated On :23 பிப்ரவரி 2026, 3:06 pm

இணையதளச் செய்திப் பிரிவு

பசும்பொன்னில் நாளை நல்ல முடிவை அறிவிக்கிறேன் என சசிகலா தெரிவித்துள்ளார்.

முன்னாள் முதல்வர்களான அறிஞர் அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா நினைவிடங்களில் சசிகலா இன்று (பிப். 23) மரியாதை செலுத்தினார்.

பின்னர் செய்தியாளர்களுடன் அவர் பேசியதாவது:

பசும்பொன்னில் அம்மா பிறந்தநாள் நிகழ்ச்சியில் கலந்துகொள்கிறேன். அதில் சில முக்கிய முடிவுகள் எடுக்க இருக்கிறோம். நாளை அனைவரும் கலந்துகொள்ள வேண்டும். நாளை நடைபெறும் கூடத்தில் முக்கிய முடிவு எடுக்கப்படும். நாளை நல்ல முடிவை அறிவிக்கிறேன் எனக் குறிப்பிட்டார்.

தமிழகத்தில் விரைவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. ஏப்ரலில் வாக்குப்பதிவுக்கான தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவின் உண்மையான தொண்டர்களை ஒருங்கிணைக்கும் பணிகளை சசிகலா மேற்கொண்டு வருகிறார்.

இதன் ஒரு பகுதியாக, டிடிவி தினகரனைப் போன்று புதிய அரசியல் கட்சித் தொடங்குவார் எனக் கூறப்படுகிறது. இதனிடையே நாளை நல்ல முடிவை அறிவிக்கிறேன் என சசிகலா கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.