முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் புதிய தொழில் முதலீடுகளுக்கு ஒப்புதல் நாளை (பிப். 24) நல்ல முடிவை அறிவிப்பேன் : சசிகலாதொகுதிப் பங்கீடு: கனிமொழி - கிரிஷ் சோடங்கர் சந்திப்பு!தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்
/

ரூ. 5,000 உரிமைத் தொகை, தொழில் முதலீடுகளுக்கு அமைச்சரவையில் அனுமதி!

முதல்வர் தலைமையிலான அமைச்சரவைக் கூட்டத்தில் புதிய தொழில் முதலீடுகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது தொடர்பாக...

News image
முதல்வர் மு.க. ஸ்டாலின்- கோப்புப் படம்
Updated On :23 பிப்ரவரி 2026, 2:36 pm

இணையதளச் செய்திப் பிரிவு

முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் புதிய தொழில் முதலீடுகளுக்கு இன்று (பிப். 23) ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

புதிய தொழில் திட்டங்களை நிறுவவும், ஏற்கெனவே நிலுவையில் உள்ள திட்டங்களை விரிவாக்கம் செயய்யவும் அமைச்சரவையில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இடைக்கால பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட புதிய திட்டங்களுக்கு ஒப்புதல் அளிப்பது குறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவைக் கூட்டம் இன்று (பிப். 23) நடைபெற்றது.

இதில், புதிய தொழில் திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. மகளிர் உரிமைத் தொகை பெற்றுவரும் மகளிருக்கு கோடை கால சிறப்புத் தொகையுடன் சேர்த்து ரூ. 5000 வரவு வைக்கப்பட்டுள்ளதற்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

மேலும், புதிய தொழில் திட்டங்களை நிறுவவும், ஏற்கெனவே நிலுவையில் உள்ள திட்டங்களை விரிவாக்கம் செய்யவும் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

ரூ. 31,502 கோடி மதிப்பிலான 46 நிறுவனங்களுக்கு அமைப்பு முறையிலான தொகுப்புச் சலுகை வழங்குவதற்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.