டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

பட்ஜெட்டில் புதிய அறிவிப்புகள் என்னென்ன? அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது!

முதல்வர் தலைமையில் தமிழக அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது.

News image
முதல்வர் ஸ்டாலின்
Updated On :5 பிப்ரவரி 2026, 7:06 am

இணையதளச் செய்திப் பிரிவு

முதல்வர் ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவைக் கூட்டம் இன்று(பிப். 5) நண்பகல் 12 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.

தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் அரசு தாக்கல் செய்யப்பட உள்ள இடைக்கால பட்ஜெட்டில் இடம்பெற வேண்டிய முக்கிய அம்சங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டு இறுதி செய்யப்பட உள்ளது.

தமிழக சட்டப்பேரவைக்கு அடுத்த சில மாதங்களில் தோ்தல் நடைபெற உள்ளதால் தற்போதைய அரசு இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யும்.

தோ்தல் முடிந்த பிறகு முழு பட்ஜெட்டை புதிய அரசு தாக்கல் செய்யும். இடைக்கால பட்ஜெட் கூட்டத் தொடர் பிப்ரவரி இரண்டாவது அல்லது மூன்றாவது வாரத்தில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், முதல்வர் ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவைக் கூட்டம் இன்று(பிப். 5) நண்பகல் 12 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.

சில மாதங்களில் பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளதால், பட்ஜெட்டில் முக்கிய அறிவிப்பிகள் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழக அமைச்சரவைக் கூட்டம் நிறைவடைந்த பிறகு, இந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்ட முடிவுகள் குறித்து தெரிவிக்கப்படும் என்று கூறப்படுகிறது.

நிகழாண்டுக்கான முதல் சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் ஆளுநா் உரையுடன் கடந்த ஜன.20-ஆம் தேதி தொடங்கி ஜன.24-ஆம் தேதி வரை நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

summary

The Tamil Nadu cabinet meeting began under the leadership of the Chief Minister.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.