முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் புதிய தொழில் முதலீடுகளுக்கு ஒப்புதல் நாளை (பிப். 24) நல்ல முடிவை அறிவிப்பேன் : சசிகலாதொகுதிப் பங்கீடு: கனிமொழி - கிரிஷ் சோடங்கர் சந்திப்பு!தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்
/

தமிழக அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது!

இடைக்கால பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட புதிய திட்டங்களுக்கு ஒப்புதல் அளிப்பது குறித்து ஆலோசனை...

News image
முதல்வர் மு.க. ஸ்டாலின்- கோப்புப் படம்
Updated On :23 பிப்ரவரி 2026, 2:07 pm

இணையதளச் செய்திப் பிரிவு

முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவைக் கூட்டம் இன்று (பிப். 23) தொடங்கி நடைபெற்று வருகிறது.

இதில், இடைக்கால பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட புதிய திட்டங்களுக்கு ஒப்புதல் அளிப்பது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்படுவதாகத் தெரிகிறது.

புதிய தொழில் முதலீட்டு திட்டங்கள், முக்கிய அறிவிப்புகள் குறித்து முடிவு எடுக்கப்படலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்திற்கு விரைவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், ஏப்ரலில் வாக்குப்பதிவு தேதி அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே நலத் திட்டங்களை விரைந்து செயல்படுத்துவதில் திமுக அரசு கவனம் செலுத்தி வருகிறது.

அடுத்தடுத்து திமுக சார்பில் மாநாடுகள் நடைபெற்று வரும் நிலையில், அதில் திமுகவின் நலத் திட்ட அறிவிப்புகள் குறித்தும் முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசி வருகிறார். இதனிடையே இடைக்கால பட்ஜெட் திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்து அதனை விரைந்து செயல்படுத்துவது தொடர்பாக ஆலோசனை நடைபெற்று வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.