முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் புதிய தொழில் முதலீடுகளுக்கு ஒப்புதல் நாளை (பிப். 24) நல்ல முடிவை அறிவிப்பேன் : சசிகலாதொகுதிப் பங்கீடு: கனிமொழி - கிரிஷ் சோடங்கர் சந்திப்பு!தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்
/

வழிதவறிய பயணங்கள்: -கோ. மன்றவாணன்

News image
Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:15 pm

கவிதைமணி

சிறையில் கழிகிறதுவழிதவறிய இளைஞர் பயணம்அவமானத்தில் முடிகிறதுவழிதவறிய பெண்ணின் பயணம்வாரிசுப்போரில் மடிகிறதுவழிதவறிய கட்சியின் பயணம்நடிகையின் மடியில் விழுகிறதுவழிதவறிய துறவியின் பயணம் பாவத்தைச் செய்து செய்துகடவுளுக்குக் காணிக்கை செலுத்துகிறதுவழிதவறிய ஆன்மீகத்தின் பயணம்நேர்மை விளக்குகளை உடைத்தெறிந்துஇருட்டில் முன்னேறுகிறதுவழிதவறிய ஆட்சியின் பயணம்வயல்கள் காயகடலில் கொட்டித் தீர்க்கிறதுவழிதவறிய மேகப் பயணம்ரத்தத்தைஅள்ளிப் பூசிக்கொண்டு வெறிக்குலவை இடுகிறதுவழிதவறிய மதங்களின் பயணம்வழிதவறிய யானையொன்றுமரக்கூண்டில் அடைக்கப்பட்டதுபோல்ஆனதுமக்களின் வாழ்க்கைப் பயணம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.