முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் புதிய தொழில் முதலீடுகளுக்கு ஒப்புதல் நாளை (பிப். 24) நல்ல முடிவை அறிவிப்பேன் : சசிகலாதொகுதிப் பங்கீடு: கனிமொழி - கிரிஷ் சோடங்கர் சந்திப்பு!தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்
/

வழிதவறிய பயணங்கள்:  கவிஞர் "இளவல்" ஹரிஹரன்

News image
Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:15 pm

கவிதைமணி

ஆயிரமும் ஐநூறும் செல்லா தென்ற       அறிவிப்பால் ஒருநாளில் கடந்து சென்றஓயாத பயணந்தான் தவறிப் போக        ஓலமிடும் கறுப்பாடு கூட்ட மாகமேயாத வழியெங்கும் மேய்ந்து செல்ல         மேய்ப்பனையே தொலைத்தபடி திரிந்து போககாயாத கானகமாய் உலகம் மாறிக்          காகிதமாய் வெறுந்தாளாய்க் கண்ணில் தோன்றும்.வழிதவறும் பயணமெலாம் இலக்கை எய்தா          வறட்டுவழிப் பயணமென ஆகிப் போகும்.மொழிதவறும் பயணமெலாம் இலக்கி யத்தில்         முறைதவறி வெறும்போக்காய் மாறிப் போகும்.விழிதவறும் பயணமெலாம் தடுமாற் றத்தில்         விதியென்றே விரைவாகக் கலைந்து போகும்.பழிசொல்லப் பயணிக்கும் பயணம் வாழ்வின்         பாதையது தவறியதாய்க் கொள்வர் நல்லோர்.சொன்னசொல்லைத் தவறுகின்ற மாந்தர் யாரும்       சுகமாகப் பயணிக்கும் நிலையில் இல்லைதன்னையறி கின்றமனம் கொண்டோர் என்றும்        தடம்மாறாப் பயணத்தில் தாமாய்ச் செல்வர்.ஒன்றுமறி யாதவுளம் கொண்டு வாழும்       உத்தமர்தம் பயணந்தான் சிறந்த தாகும்.என்னநிலை வந்தாலும் எப்போ தும்நம்       எல்லையினை மறவாத பயணம் காக்கும்.       

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.