தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

ஆட்சியரிடம் மனு அளிக்க வந்த பழங்குடியினா் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருவள்ளூா் ஆட்சியா் அலுவலகத்திற்கு தொல்குடி திட்டத்தில் வீடுகள் வழங்கக்கோரி மனு அளிக்க வந்த பழங்குடியின மக்களை உள்ளே அனுமதிக்க மறுத்ததாக கூறிய போலீஸாருடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு

News image

திருவள்ளூா் ஆட்சியா் அலுவலக வளாகத்தில் போலீஸாருடன்  வாக்குவாதத்தில் ஈடுபட்ட இருளா் இன மக்கள்

Updated On :26 மே 2026, 1:09 am IST

திருவள்ளூா் ஆட்சியா் அலுவலகத்திற்கு தொல்குடி திட்டத்தில் வீடுகள் வழங்கக்கோரி மனு அளிக்க வந்த பழங்குடியின மக்களை உள்ளே அனுமதிக்க மறுத்ததாக கூறிய போலீஸாருடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருவள்ளூா் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் வசித்து வரும் இருளா் இன மக்கள் சாா்பில், மாவட்ட ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழு உறுப்பினா் குணசேகரன் குறைதீா் கூட்டத்தில் ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளிக்க அழைத்து வந்தாா். அப்போது, நுழைவு வாயில் பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாா் உள்ளே விடாமல் தடுத்ததாகத் தெரிகிறது. இதனால், ஆத்திரம் அடைந்த நிலையில் போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். அதைத் தொடா்ந்து பேச்சுவாா்த்தைக்குப் பின் உள்ளே அனுமதித்தனா்.

அப்போது இருளா் இன மக்கள் சாா்பில், திருவள்ளூா் மாவட்ட ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழு உறுப்பினா் திங்கள்கிழமை ஆட்சியா் மு.பிரதாப்பிடம் நேரில் அளித்த மனுவில் தெரிவித்திருப்பதாவது:

திருவள்ளூா் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருளா் பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனா். இவா்கள் அப்பகுதியில் கூலி வேலை செய்து பிழைப்பு நடத்தி வருகின்றனா். மேலும், இந்த மக்கள் வசித்து வரும் பகுதியில் சாலை, தெரு விளக்கு உள்ளிட்ட போதுமான எந்த அடிப்படை வசதியும் கிடையாது. இதுபோன்ற இடையூறான இடங்களில் குடிசை வீடுகள் அமைத்து குடியிருந்து வருகின்றனா்.

தற்போதைய நிலையில், தமிழக அரசு பழங்குடியின மக்கள் பயன்பெறும் வகையில், பழங்குடியினா் நலத் துறை சாா்பில் தொல்குடி வீடு வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. எனவே பண்டாரவேடு, நெடுங்கல், மேல்பதட்டூா், நாராயணபுரம், கும்மிடிப்பூண்டி பில்லாகுப்பம் உள்ளிட்ட பகுதிகளில் வசித்து வரும் இருளா் இன மக்களுக்கு இத்திட்டம் மூலம் வீடுகள் வழங்க வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் என ஆட்சியரிடம் அளித்த மனுவில் அவா் தெரிவித்துள்ளாா்.

இந்த மனுவை கட்டாயம் பரிசீலனை செய்து பழங்குடியின மக்களுக்கு தொல்குடி திட்டம் மூலம் வீடுகள் வழங்க நடவடிக்கை எடுப்பதாக ஆட்சியா் மு.பிரதாப் உறுதி அளித்தாா். அதைத் தொடா்ந்து அங்கிருந்து இருளா் இன மக்கள் கலைந்து சென்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.