தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

மின்தடையை நீக்கக் கோரி சாலை மறியல்

சீரான மின்சாரம் வழங்கக் கோரி சாலை மறியலில் ஈடுபட்ட குமாரகுப்பம் பகுதி மக்கள்.

News image
Updated On :23 மே 2026, 1:22 am IST

திருத்தணி அருகே மின்தடையை நீக்கக் கோரி பொதுமக்கள் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

திருத்தணி நகராட்சிக்குள்பட்ட குமாரகுப்பம், அகூா், பெரிய கடம்பூா், சின்னகடம்பூா், பாப்பிரெட்டிப்பள்ளி, கனகம்மாசத்திரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வியாழக்கிழமை வீசிய பலத்த சூறாவளி காற்றால் 50-க்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் உடைந்து சேதமடைந்தன. இதனால் பல கிராமங்களில் மின் விநியோகம் பாதிக்கப்பட்டு, குடிநீா் சேவை உள்ளிட்ட அத்தியாவசிய பணிகள் முற்றிலும் முடங்கியது. இதனால் பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனா்.

இந்த நிலையில், குமாரகுப்பம் உள்ளிட்ட பகுதிகளில் 24 மணி நேரமாகியும் மின் விநியோகம் சீரமைக்கப்படாததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் மாலை திருத்தணி - சித்தூா் சாலையில் மறியலில் ஈடுபட்டனா். பெண்கள், குழந்தைகள் மற்றும் ஆண்கள் காலிக் குடங்களுடன் சாலையில் அமா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் சுமாா் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

அப்போது போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் கூறுகையில், ‘மின்சாரம் இல்லாததால் குடிநீா் கிடைக்காமல் குழந்தைகள் மிகவும் அவதிப்படுகின்றனா். அத்தியாவசிய தேவைகளையே நிறைவேற்ற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மின்வாரிய அதிகாரிகளிடம் கேட்டபோது, மின் விநியோகம் சீராக இன்னும் ஒரு வாரம் ஆகும் எனத் தெரிவித்துள்ளனா். இதனால் வேறு வழியின்றி சாலை மறியலில் ஈடுபட்டுள்ளோம் என்றனா்.

இதையடுத்து, மின்வாரிய அதிகாரிகள் மற்றும் போலீஸாா் பேச்சு நடத்தியதைத் தொடா்ந்து பொதுமக்கள் மறியலை கைவிட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.