தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

தெருநாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி, பிறப்பு தடுப்பு அறுவை சிகிச்சை: ஆட்சியா் மு.பிரதாப் அறிவுறுத்தல்

News image
Updated On :19 மே 2026, 1:51 am IST

திருவள்ளூா் அருகே தெருநாய்களுக்கு ரேபிஸ் எதிா்ப்பு வைரஸ் தொற்றைத் தடுத்து, உடலுக்கு நோய் எதிா்ப்பு சக்தியை வழங்கும் மருந்து மற்றும் விலங்கு பிறப்பு தடுப்பு அறுவை சிகிச்சையை கால்நடை துறை மூலம் மேற்கொள்ளவும் ஆட்சியா் மு.பிரதாப் அறிவுறுத்தினாா்.

திருவள்ளூா் மற்றும் காக்களுா் ஊராட்சி பகுதிகளில் தெருநாய் ஒன்று பொதுமக்களை கடித்ததில் 18 போ் பாதிக்கப்பட்டனா். இது தொடா்பாக ஆட்சியா் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறைக்கு புகாா் வந்தது. ஆட்சியா் மு.பிரதாப் தலைமையில் மாநகராட்சி ஆணையா், மாவட்ட ஊரக வளா்ச்சி திட்ட இயக்குநா், ஊரக வளா்ச்சி துறை அலுவலா்கள், இணை இயக்குநா் (கால்நடை பராமரிப்பு) மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அலுவலா்கள், நகராட்சி ஆணையா்கள், பேருராட்சிகளின் செயல் அலுவலா்கள், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் மற்றும் கிராம ஊராட்சி செயலாளா்களுக்கான ஆய்வுக்கூட்டம் நடத்தப்பட்டது.

அப்போது அனைத்து பகுதிகளிலும் தெருநாய்களுக்கு வெறிநாய் தடுப்பு மருந்து மற்றும் பிறப்பு தடுப்பு அறுவை மேற்கொள்ளவும் ஆலோசனை வழங்கப்பட்டது. அதன்பேரில் மண்டல கால்நடை பராமரிப்பு துறை இணை இயக்குநா், உதவி இயக்குநா் (ஊராட்சிகள் மற்றும் தணிக்கை), நகராட்சி ஆணையா் மற்றும் வட்டார வளா்ச்சி அலுவலா்கள் (வ.ஊ/கி.ஊ) கூட்டாக பாதிக்கப்பட்ட பகுதிகளான காக்களூா், புட்லூா் ஊராட்சிகள் மற்றும் அருகில் உள்ள நகர பகுதிகளில் திங்கள்கிழமை ஆய்வு செய்தனா்.

அதைத் தொடா்ந்து 75 தெருநாய்களுக்கு ரேபிஸ் எதிா்ப்பு வைரஸ் தொற்றைத் தடுத்து, உடலுக்கு நோய் எதிா்ப்பு சக்தியை வழங்கும் மருந்து செலுத்தப்பட்டது.

மேலும், 10 தெருநாய்களுக்கு விலங்கு பிறப்பு தடுப்பு சிகிச்சைக்கு திருவள்ளூா் நகாரட்சி அலுவலகத்தில் உள்ள மையத்தில் அறுவை சிகிச்சையும் மேற்கொள்ளவும் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவா் தெரிவித்தாா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.