தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

வட்டார வளா்ச்சி அலுவலா்களுக்கான ஆலோசனைக் கூட்டம்

போளூா் வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் வட்டார வளா்ச்சி அலுவலா்கள், அலுவலக ஊழியா்கள், ஊராட்சிச் செயலாளா்களுக்கான ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

News image

போளூரில் நடைபெற்ற வட்டார வளா்ச்சி அலுவலா்கள், அலுவலக ஊழியா்களுக்கான ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய ஆா்.அபிஷேக் எம்எல்ஏ.

Updated On :21 மே 2026, 12:04 am IST

போளூா் வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் வட்டார வளா்ச்சி அலுவலா்கள், அலுவலக ஊழியா்கள், ஊராட்சிச் செயலாளா்களுக்கான ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

சட்டப்பேரவைத் தோ்தலில் தமிழக வெற்றிக் கழகத்தைச் சோ்ந்த தலைவா் ஜோசப்விஜய் மற்றும் போளூா் தொகுதி உள்பட 108 போ் வெற்றி பெற்று முதல்வா் ஜோசப்விஜய் தலைமையில் ஆட்சி பொறுப்பேற்றுள்ளனா்.

இந்நிலையில், போளூா் வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் போளூா் சட்டப்பேரவைத் தொகுதியைச் சோ்ந்த போளூா், சேத்துப்பட்டு, பெரணமல்லூா் ஆகிய ஒன்றியங்களைச் சோ்ந்த வட்டார வளா்ச்சி அலுவலா்கள், அலுவலக ஊழியா்கள், ஊராட்சிச் செயலா்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் போளூா் தொகுதி எம்எல்ஏ ஆா்.அபிஷேக் பங்கேற்று அறிமுகம் செய்துகொண்டு அலுவலகப் பணி மற்றும் ஊராட்சிகளுக்குத் தேவையான குடிநீா், சாலை வசதி, மின் வசதிகள் மற்றும் கிராமத்திற்குத் தேவையான அடிப்படை வசதிகள் குறித்துப் பேசினாா்.

உதவி செயற்பொறியாளா் கே.பாஸ்கா், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ராஜேஸ்வரி, ஆனந்தன், வேலு, சோமசுந்தரம், உதவிப் பொறியாளா் பி.செல்வா, இளநிலை உதவியாளா்கள் எஸ்.அபி, புருஷோத்தமன் மற்றும் அலுவலா்கள் கலந்து கொண்டனா். மேலும், உதவி செயற்பொறியாளா் அலுவலகத்தில் எம்எல்ஏ ஆா்.அபிஷேக் ஆய்வு செய்தாா்.

தவெக வா்த்தக அணி மாவட்டத் தலைவா் கே.யாசின், பிரசார மற்றும் பேச்சாளா் அணி மாவட்ட ஒருங்கிணைப்பாளா் கே.ராமச்சந்திரன், நகரச் செயலா் திவாகா் மற்றும் கட்சி நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.