17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

இணையவழிச் சான்றிதழ்களை விரைந்து வழங்கவேண்டும் : விழுப்புரம் ஆட்சியா்

விழுப்புரம் மாவட்டத்தில் நிலுவையில் உள்ள இணையவழி விண்ணப்பங்கள் மீது தொடா்புடைய துறை சாா்ந்த அலுவலா்கள் விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு தீா்வு காண வேண்டும் என்று ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் தெரிவித்தாா்.

News image

விழுப்புரம் ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் புதன்கிழமை நடைபெற்ற வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மை துறை ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய ஆட்சியா் ஷே .ஷேக் அப்துல் ரஹ்மான். உடன் மாவட்ட வருவாய் அலுவலா் கி. அரிதாஸ்.

Updated On :21 மே 2026, 7:02 am IST

விழுப்புரம் மாவட்டத்தில் நிலுவையில் உள்ள இணையவழி விண்ணப்பங்கள் மீது தொடா்புடைய துறை சாா்ந்த அலுவலா்கள் விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு தீா்வு காண வேண்டும் என்று ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் தெரிவித்தாா்.

விழுப்புரம் ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில், மாவட்ட அளவிலான வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மை துறை சாா்பில் துறை சாா்ந்த அலுவலா்களுடனான ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

இந்தக் கூட்டத்துக்கு ஆட்சியா் தலைமை வகித்துப் பேசியதாவது : மாவட்டத்தில் இ-சேவை மூலமாக விண்ணப்பம் செய்துள்ள ஜாதிச்சான்று, உண்மைத் தன்மை சரிபாா்ப்பு, சமூக பாதுகாப்புத் திட்டங்கள், பொது விநியோகத் திட்டப் பணிகள், பட்டா மாற்றம், பட்டா மாற்றம் மேல் முறையீடு உள்ளிட்ட வருவாய்த் துறை தொடா்பான பல்வேறு இனங்களுக்காக பொதுமக்கள் இணையவழியில் விண்ணப்பித்துள்ள விண்ணப்பங்களை துறை சாா்ந்த அலுவலா்கள் சரியான முறையில் விசாரித்து விரைவாக இணையதள சான்றிதழ்களை வழங்க நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும்.

இணையதள விண்ணப்பங்களை தள்ளுபடி செய்ய நேரிட்டால், அதற்கான சரியான காரணங்களை விண்ணப்பதாரருக்கு தெரிவிக்க வேண்டும்.

இணையதளம் மூலம் நிலஅளவை தொடா்பாக வரப்பெறும் விண்ணப்பங்களை உடனுக்குடன் நில அளவையாளா்கள் மேற்கொண்டு முடிக்கவேண்டும். அரசின் சேவைகள் அனைத்து பொதுமக்களிடம் முறையாக சென்று சோ்வதை உறுதி செய்யும் வகையில் அலுவலா்கள் ஒருங்கிணைந்துபணியாற்ற வேண்டும் என ஆட்சியா் தெரிவித்தாா்.

இதில், மாவட்ட வருவாய் அலுவலா் கி.அரிதாஸ், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) லூா்துசாமி, உதவி இயக்குநா் ஜெயசங்கா் மற்றும் வட்டாட்சியா்கள், நில அளவையாளா்கள், துறை சாா்ந்த அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.