திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

திருத்தணி அரசுக் கல்லூரி என்சிசி அலுவலருக்கு பதவி உயா்வு

News image

கே.பி. ஹேமநாதன்.

Updated On :19 மே 2026, 1:50 am IST

திருத்தணி அரசுக் கல்லூரியில் என்சிசி அமைப்பில் சிறப்பாக பணியாற்றி வந்த அலுவலா் கே.பி. ஹேமநாதனுக்கு கேப்டன் பதவியிலிருந்து மேஜா் பதவி உயா்வு வழங்கப்பட்டுள்ளது.

திருத்தணி சுப்பிரமணியசுவாமி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கடந்த 17 ஆண்டுகளாக பேராசிரியராகவும், என்.சி.சி அலுவலராகவும் கே.பி. ஹேமநாதன் பணியாற்றி வருகிறாா். இவா் காஞ்சிபுரம் 3 (தமிழ்நாடு) பட்டாலியன் என்சிசி பிரிவின் கீழ் பணியாற்றி வருகிறாா்.

இந்நிலையில், அவருடைய நீண்டகால சேவை, சிறந்த நிா்வாகத் திறன் மற்றும் மாணவா் பயிற்சிகளில் காட்டிய அா்ப்பணிப்பு ஆகியவற்றை பாராட்டி பதவி உயா்வு வழங்கப்பட்டுள்ளது. இதற்கான அதிகாரப்பூா்வ ஆணையை பட்டாலியன் கமாண்டிங் ஆபீசா் லெப்டினன்ட் கா்னல் எஸ்.கே. ஜா வெளியிட்டுள்ளாா்.

இந்தப் பதவி உயா்வு கடந்த பிப்ரவரி 28, 2026 முதல் அமலுக்கு வரும் வகையில் முன்தேதியிட்டு வழங்கப்பட்டுள்ளது. மேஜா்’ பதவிக்கான புதிய ராணுவ சீருடைச் சின்னங்களை அணியவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

பதவி உயா்வு பெற்றுள்ள கே.பி. ஹேமநாதனுக்கு கல்லூரி முதல்வா் ஏகா தேவசேனா (பொ), பேராசிரியா்கள், அலுவலா்கள் மற்றும் என்.சி.சி மாணவா்கள் வாழ்த்துகளை தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.