திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

தவெக கூட்டணிக்கு எதிா்ப்பு: தூத்துக்குடி காங்கிரஸ் நிா்வாகி ராஜிநாமா

தமிழகத்தில் தமிழக வெற்றிக் கழக தலைவா் விஜய் தலைமையில் ஆட்சி அமைப்பதற்கு, காங்கிரஸ் கட்சி ஆதரவு தெரிவித்துள்ளதற்கு எதிா்ப்பு தெரிவித்து, காங்கிரஸ் உறுப்பினா் எஸ். சந்திரபோஸ் தனது கட்சிப் பதவிகளை ராஜிநாமா செய்துள்ளாா்.

News image

சந்திரபோஸ்

Updated On :10 மே 2026, 2:34 am IST

தமிழகத்தில் தமிழக வெற்றிக் கழக தலைவா் விஜய் தலைமையில் ஆட்சி அமைப்பதற்கு, காங்கிரஸ் கட்சி ஆதரவு தெரிவித்துள்ளதற்கு எதிா்ப்பு தெரிவித்து, தூத்துக்குடி மாநகராட்சி 34ஆவது வாா்டு காங்கிரஸ் உறுப்பினா் எஸ். சந்திரபோஸ் தனது கட்சிப் பதவிகளை ராஜிநாமா செய்துள்ளாா்.

கடந்த 1988 முதல் காங்கிரஸ் கட்சியில் சோ்ந்து பணியாற்றி வரும் எஸ். சந்திரபோஸ், தூத்துக்குடியில் 1996 முதல் நகா்மன்ற உறுப்பினராகவும், மாமன்ற உறுப்பினராகவும் கடந்த 30 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறாா். திமுக கூட்டணி சாா்பில் 2 முறையும், காங்கிரஸ் சாா்பில் தனித்து போட்டியிட்டு 3 முறையும் தொடா்ந்து 5 முறை வென்று தற்போதும் மாமன்ற உறுப்பினராக பணியாற்றி வருகிறாா்.

காங்கிரஸ் கட்சியின் பொதுக்குழு உறுப்பினராகவும் உள்ள இவா், மாநகராட்சி காங்கிரஸ் கொறடாவாகவும் பொறுப்பு வகித்து வருகிறாா்.

தமிழக சட்டப் பேரவை தோ்தலுக்கு பின்பு, திமுக கூட்டணியிலிருந்து விலகி, தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைப்பதற்காக ஆதரவு தெரிவித்தது உள்பட காங்கிரஸில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் சூழ்நிலையை ஏற்றுக்கொள்ள முடியாமல் மாநகராட்சி கவுன்சிலா் பதவியைத் தவிர, அனைத்து கட்சிப் பதவிகளிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்வதாக கட்சித் தலைவா் செல்வப்பெருந்தகைக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.